செய்திகள் :

``எப்போதும் அக்கறையுடன் இருக்கக்கூடியவர், வருத்தமா இருக்கு" - புஷ்பலதா மறைவிற்கு கார்த்தி இரங்கல்

post image
பழம் பெரும் நடிகையும், நடிகர் ஏவிஎம்.ராஜனின் மனைவியுமான புஷ்பலதா, வயது மூப்பின் காரணமாக நேற்று (பிப்ரவரி 4) காலமானார்.

தமிழில் ‘கொங்கு நாட்டு தங்கம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான புஷ்பலதா 'யாருக்கு சொந்தம்', 'நானும் ஒரு பெண்', 'சிம்லா ஸ்பெஷல்', 'கற்பூரம்', 'பார் மகளே பார்', 'புதுவெள்ளம்', 'சாரதா', 'ஜீவனாம்சம்' உள்பட 100க்கும் மேலான படங்களில் ஹீரோயினாகவும், குணசித்திரமாகவும் நடித்திருக்கிறார். இவரின் மறைவிற்கு திரையுலகைச் சேர்ந்த பலர் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

புஷ்பலதா
புஷ்பலதா

அந்த வகையில் நடிகர் கார்த்தி நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார். செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி, “ புஷ்பலதா அம்மா, ஏவிஎம். ராஜன் சார் இருவரும் சினிமாவில் பிரபலமான ஜோடிகள். நிறைய இடங்களுக்குப் பயணம் செய்திருக்கிறார்கள். பேரன், பேத்தி என்று ஒரு முழுமையான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள்.

உடல்நலக் குறைவால் காலமாகி இருக்கிறார். இவர்களின் வீடு நடிகர் சங்கத்திற்கு  அருகிலேயே இருப்பதால் அடிக்கடி அடிக்கடி வந்து ஐயாவை ( ஏவிஎம்.ராஜன்) பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி இருக்கிறேன்.

கார்த்தி
கார்த்தி

எப்போதும் அக்கறையுடன் இருக்கக்கூடியவர். அவரின் இறப்பு மனவருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என்று பேசியிருக்கிறார். 

Vishal: ``வெளிவராமல் இருக்கும் பல படங்களுக்கு `மதகஜராஜா' முன்மாதிரி!'' - நெகிழும் விஷால்

படமெடுக்கப்பட்டு 12 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்தாண்டு திரையரங்குகளில் வெளியானது விஷாலின் `மதகஜராஜா'.பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியும் திரைப்படத்திற்குக் கிடைத்திருக்கிறது. தமிழி... மேலும் பார்க்க

Netflix 2025: `Binge வாட்சுக்கு ரெடியா?' - இந்தாண்டு நெட்ஃபிளிக்ஸில் வெளியாகவிருக்கும் படைப்புகள்

ஓ.டி.டி தளங்களை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.இந்தியாவில் மட்டும் கடந்தாண்டு ஓ.டி.டி-யில் படம் பார்த்தவர்களின் எண்ணிக்கை 54 .73 கோடியாக உயர்ந்திருக்கிறது. ஒரிஜினல் கன்டென்ட... மேலும் பார்க்க

`நடிகர் ராஜனுடனான காதல்’ - மறைந்த பழம்பெரும் நடிகை புஷ்பலதா நினைவுகள் பகிரும் எஸ்.பி.முத்துராமன்

பழம் பெரும் நடிகையும், நடிகர் ஏவிஎம்.ராஜனின் மனைவியுமான புஷ்பலதா, வயது மூப்பின் காரணமாக நேற்று காலமானார். தமிழில் 'கொங்கு நாட்டு தங்கம்' படத்தின் மூலம் அறிமுகமானவர். அதற்கு முன்னரே தெலுங்கில் சில படங்... மேலும் பார்க்க

Mani Ratnam: ``இதற்கு இரண்டு தசாப்தங்கள் ஆகியிருக்கிறது மணி சார்!'' - ராஜ்குமார் பெரியசாமி

`அமரன்' திரைப்படம் கடந்தாண்டு அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் நடித்து பாராட்டுகளை அள்ளினார். அதுமட்டுமின்றி, `அமரன்' திரைப்படத்திற்குப் பல்வேறு மேட... மேலும் பார்க்க

பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார்

பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார்.சென்னையில் வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட பிரச்னைகளால் சிகிச்சைப் பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்திருக்கிறார். இவருக்கு வயது 87.எம்.ஜி. ஆர், சிவ... மேலும் பார்க்க