செய்திகள் :

எப்போதும் உன்னுடன் இருப்பேன்: மனைவி பிறந்தநாளில் பும்ரா நெகிழ்ச்சி!

post image

மும்பை இந்தியன்ஸ் வீரர் ஜஸ்ப்ரீத் பும்ரா தனது மனைவி பிறந்தநாளுக்கு நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் 2013ஆம் ஆண்டு அறிமுகமான ஜஸ்ப்ரீத் பும்ரா இந்தியாவுக்கு 2018-இல் விளையாடத் தொடங்கினார்.

தற்போது, உலகிலேயே சிறந்த பந்துவீச்சாளராக அறியப்படும் பும்ரா கிரிக்கெட் நிகழ்ச்சி தொகுப்பாளினி சஞ்சனாவை கடந்த 2021இல் திருமணம் செய்தார்.

இந்தத் தம்பதிகளுக்கு 2 வயதாகும் அங்காட் எனும் ஆண் குழந்தை இருக்கிறான்.

சமீபத்தில் இந்தக் குழந்தை ஐபிஎல் போட்டியை காணவந்தபோது அமைதியாக இருந்ததால் சமூக வலைதளங்களில் பலரும் அந்தக் குழந்தைக்கு மனரீதியாக பிரச்னை இருப்பதாக பதிவிட்டது சர்ச்சையானது.

இது குறித்து சஞ்சானா மிகவும் வருத்தப்பட்டு இப்படியெல்லாம் பதிவிட வேண்டாமென கண்டித்தார்.

இந்நிலையில் சஞ்சனா பிறந்தநாளில் அவரது நடன விடியோவை பகிர்ந்த பும்ரா கூறியதாவது:

பிறந்தநாள் வாழ்த்துகள் என் இதயமே. உனக்கு எப்போதுமே மகிழ்ச்சியும் காதலுக்கு இருக்குமென வாழ்த்துகிறேன். உன்னுடைய எல்லா கடினமான நாள்களிலும் நானும் நமது மகனும் உடன் இருப்போம். நாங்கள் உன்னைக் காதலிக்கிறோம் எனக் கூறியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித், கோலி இடம்பெறுவார்களா? கௌதம் கம்பீர் பதில்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் இந்திய அணியில் இடம்பெறுவார்களா என்பது குறித்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பேசியுள்ளார்.இந்திய அ... மேலும் பார்க்க

விராட் கோலியை விட அவரது ரசிகர்கள் மிகப்பெரிய கோமாளிகள்..! கொந்தளித்த பாடகர்!

ஹிந்தி பாடகர் விராட் கோலி, அவரது ரசிகர்கள் குறித்து கூறியது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடிவரும் கோலி அவ்வபோது சமூக வலைதளங்களிலும் எதாவது விளம்பரங்களுக்காகப... மேலும் பார்க்க

முகமது சிராஜுக்கு பிசிசிஐ சார்பில் வைர மோதிரம் அணிவித்த ரோஹித் சர்மா!

ஐசிசி டி20 உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய முகமது சிராஜுக்கு பிசிசிஐ சார்பில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா வைர மோதிரத்தை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.கடந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் கரீபியனி... மேலும் பார்க்க

இது தனிப்பட்ட பிரச்னை கிடையாது; ரபாடா விவகாரத்தில் முன்னாள் ஆஸி. கேப்டன் காட்டம்!

ஊக்க மருந்து பயன்படுத்திய விவகாரத்தில் ககிசோ ரபாடாவுக்கு கிரிக்கெட் விளையாட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் டிம் பெயின் பேசியுள்ளார்.தென்னாப்பிரிக்க அணியின... மேலும் பார்க்க

ஐசிசி தரவரிசை வெளியீடு: ஒருநாள், டி20-களில் இந்தியா ஆதிக்கம்; டெஸ்ட்டில் சறுக்கல்!

ஐசிசி ஆடவர் அணிகளுக்கான தரவரிசையில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணி முதலிடத்தை தக்கவைத்து அசத்தியுள்ளது.ஐசிசியின் ஆடவர் அணிகளுக்கான தரவரிசையினை ஐசிசி இன்று (மே 5) வெளியிட்டது. அதில், ஒருநா... மேலும் பார்க்க

23 வயது நடிகையின் புகைப்பட சர்ச்சைக்கு விராட் கோலி விளக்கம்!

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இளம் நடிகை அவ்னீத் கௌர் புகைப்பட சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளார். சமூக ஊடகத்தில் நேற்று (மே.2) விராட் கோலி அவ்னீத் கௌரின் ஃபேன் பேஜில் (ரசிகர்களின் பக்கத்தில்) ந... மேலும் பார்க்க