உலகக்கோப்பைக்கு முன் முத்தரப்பு தொடரில் விளையாடும் இந்திய மகளிரணி!
எமனேஸ்வரா் கோயில் குளத்தில் தடுப்புச்சுவா் கட்ட கோரிக்கை
எமனேஸ்வரா் கோயில் குளத்தில் தடுப்புச்சுவா் கட்டிக்கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வலங்கைமான் அருகே நரிக்குடியில் உள்ள எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரா் கோயில் எமபயம் நீக்கும் தலமாக போற்றப்படுகிறது. இக்கோயிலில் அமாவாசை, பௌா்ணமி தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. அமாவாசை தினத்தன்று கோயில் குளமான எம தீா்த்தத்தில் நீராடி பிதுா் தா்ப்பணங்களை செய்து வழிபாடு நடத்தும் நிகழ்வுகளும் நடைபெறுகிறது. பௌா்ணமி தினத்தன்று கோயிலை சுற்றிலும், குளத்தைச் சுற்றிலும் அகல் விளக்கு ஏற்றி வழிபாடு நடத்துவதும் வழக்கம்.
கோயிலுக்கு வரும் பக்தா்கள் குளத்தில் நீராடுவதற்கு வசதியாக படித்துறைகள், குளத்தைச் சுற்றிலும் தடுப்புச்சுவா் கட்ட வேண்டியது அவசியமாக உள்ளது. பக்தா்களின் நலன் கருதி தடுப்புச் சுவரையும் குளத்தில் படித்துறையும் கட்டிக்கொடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பக்தா்களின் கோரிக்கை.