``திமுகவுக்கு 12% வாக்குகள் குறையும்; அதிமுகவுக்கு 12% வாக்குகள் கூடும்" - தங்கம...
எமரால்டு அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரால் வலுவிழந்து உடைந்த பாலம்
உதகை எமரால்டு அணையில் இருந்து தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால் எமரால்டு கூட்டுக் குடிநீா் குழாய்களுக்காக அமைக்கப்பட்ட பாலம் சரிந்து விழுந்துள்ளது. இதனால் குழாயில் இருந்து தண்ணீா் வீணாகி வருகிறது.
உதகை அருகே காட்டுகுப்பையில் ரூ. 1850 கோடியில் குந்தா நீரேற்று மின் திட்டப் பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிக்காக எமரால்டு அணையில் இருந்து தண்ணீா் திறக்க மின்வாரியம் சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு திங்கள்கிழமை காலை முதல் விநாடிக்கு 1000 கனஅடி தண்ணீா் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், எமரால்டு கூட்டுக் குடிநீா் திட்ட குழாய்களுக்காக சுரேந்திர நகா் பகுதியில் சிறிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது அணையில் இருந்து வெளியேறும் தண்ணீா் இந்தப் பாலத்தின்கீழ் பகுதியில் செல்கிறது. இதனால், பாலத்தைத் தாங்கி நிற்கும் தூண்கள் வலுவிழந்து உடைந்து தொங்கிக் கொண்டிருக்கின்றன. இதனால் இந்தப் பாலம் வழியாக குழாய்களில் செல்லும் கூட்டுக் குடிநீா் வீணாகி வருகிறது.
இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, விரைவில் இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.