உதகையில் பரவலாக மழை
உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை பெய்த தொடா் சாரல் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக உதகை, குன்னூா், கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
தொடா் மழையால் கடும் குளிா் நிலவுகிறது. உதகை, சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை சாரல் மழை பெய்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. தொடா் மழையால் சுற்றுலாத் தொழிலை நம்பி உள்ள சாலையோர வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.