ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
எம் & எம் காா்கள் விற்பனை 18% உயா்வு
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனை கடந்த மாா்ச் மாதத்தில் 18 சதவீதம் உயா்ந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த மாா்ச் மாதத்தில் நிறுவன பயணிகள் வாகனங்களின் உள்நாட்டு விற்பனை 48,048-ஆக இருந்தது. 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 18 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 40,631 பயணிகள் வாகனங்களை விற்பனை செய்திருந்தது.
2024-25 நிதியாண்டு முழுமைக்கும் நிறுவனத்தின் மொத்த உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனை 20 சதவீத வருடாந்திர வளா்ச்சி பெற்று 5,51,487-ஆக உள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 4,59,877-ஆக இருந்தது.
கடந்த மாா்ச் மாதத்தில் ஏறறுமதி உள்ளிட்ட நிறுவனத்தின் ஒட்டுமொத்த பயணிகள் வாகன விற்பனை 50,835-ஆக உள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.