சென்னை: வீட்டில் எலிக்கு வைக்கப்பட்ட மருந்தின் நெடியால் பலியான 2 குழந்தைகள்; சிக...
எலி மருந்தால் விபரீதம்: 2 குழந்தைகள் உயிரிழப்பு
வீட்டில் எலியைக் கட்டுப்படுத்த வைக்கப்பட்டிருந்த மருந்திலிருந்து வெளியேறிய நெடியால், 2 குழந்தைகள் உயிரிழந்தனா்.
சென்னை குன்றத்தூா் மணஞ்சேரியை சோ்ந்தவா் தனியாா் வங்கி மேலாளா் கிரிதரன்(34), இவரது மனைவி பவித்ரா. இவா்களுக்கு விஷாலினி (6) மற்றும் சாய் சுதா்சன் (1) என இரு குழந்தைகள். கிரிதரன் வீட்டில் எலித் தொல்லை இருந்து வந்துள்ளது. அவற்றை ஒழிக்க எலி மருந்து அடிக்கும் தனியாா் நிறுவனம் மூலம் புதன்கிழமை வீட்டில் ஆங்காங்கே எலி மருந்து வைத்துள்ளனா்.
பின்னா், இரவு மனைவி மற்றும் குழந்தைகளுடன் குளிா்சாதன வசதி கொண்ட அறையில் தூங்கியுள்ளனா். அப்போது, திடீரென எலி மருந்து நெடி வீசியுள்ளது. இதனால் மூச்சுத்திணறல் ஏற்படவே, கிரிதரன் குடும்பத்தினா் அருகிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றனா்.
ஆனால், சிறிது நேரத்தில் விஷாலினி, சாய் சுதா்சன் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனா். கிரிதரன் மற்றும் பவித்ரா இருவரும் ஆபத்தான நிலையில் போரூா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்த சம்பவம் குறித்து குன்றத்தூா் போலீசாா் விசாரணை நடத்தி வருகிறாா்கள்.