செய்திகள் :

எவரெஸ்ட் மலையேற்றம்: இந்தியர் உள்பட 2 வீரர்கள் பலி!

post image

நேபாளத்தில் அமைந்துள்ள எவரெஸ்ட் மலையில் 2 வீரர்கள் மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இமய மலைத்தொடர்களில் அமைந்துள்ள எவரெஸ்ட் மலையில் ஏறிய இந்தியா மற்றும் பிலிப்பின்ஸ் நாட்டைச் சேர்ந்த 2 வீரர்கள் பலியாகியுள்ளதாக அவர்களது மலையேற்ற ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில், இந்தியாவைச் சேர்ந்த சுபத்தரா கோஷ் என்ற நபர் எவரெஸ்ட் மலையின் உச்சியை அடைந்து திரும்பி வரும்போது 8,849 மீட்டர் (29,032 அடி) உயரத்தில் நேற்று (மே 15) மரணமடைந்துள்ளார்.

இதேபோல், பிலிப்பின்ஸ் நாட்டைச் சேர்ந்த பிலிப் சாண்டியாகோ (வயது 45) என்ற நபர் அம்மலையின் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள முகாம் 4-ஐ அடைந்துள்ளார். பின்னர், அங்கிருந்து எவரெஸ்ட்டின் உச்சியை அடைய மீண்டும் தனது பயணத்தைத் தொடர்ந்தபோது கடந்த மே 14 ஆம் தேதியன்று பலியானதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர்களுக்கு மலையேறத் தேவையான அத்தியாவசிய உதவிகளைச் செய்த, நேபாளத்தைச் சேர்ந்த மலையேற்ற ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், பலியான இருவரது உடல்களும் எவரெஸ்ட் மலையிலேயே உள்ளதாகவும், சடலங்களைக் கீழே கொண்டு வருவது பற்றி இதுவரை திட்டமிடப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

எவரெஸ்ட் மலையில் மரணமடையும் மனிதர்களின் உடல்கள் மீட்பது மிகவும் கடினமானது மற்றும் விலை உயர்ந்தப் பணி எனக் கூறப்படுகிறது. மேலும், அம்மலையில் ஏறுவதற்கு மார்ச் மற்றும் மே மாதம் வரையில் மட்டுமே அனுமதிக்கப்படுவதினால் பலரும் இமய மலையின் உச்சியை அடைய முயற்சித்து வருகின்றனர்.

முன்னதாக, கடந்த 1953-ம் ஆண்டு நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த எட்மண்ட் ஹிலாரி மற்றும் அவரது நேபாள உதவியாளரான டென்சிங் நோர்கே ஆகியோர் முதல்முறையாக எவரெஸ்ட் மலையில் ஏறி அதன் உச்சியை அடைந்தனர். அதன் பின்னர், அங்கு மலையேற்றத்தில் ஈடுபட்டவர்களில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! ஒரே நாளில் 93 பேர் பலி!

130 ஆண்டுகளுக்குப் பின் உருவான பேய் ஏரி..

கலிஃபோர்னியாவின் பேய் ஏரி என்றழைக்கப்படும் துலாரே ஏரி 130 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் உருவாகியுள்ளது. மிகப்பெரிய பனிப்பாறை உருகியதால் தற்போது உருவான இந்த ஏரி சுமார் 94,000 ஏக்கர் வேளாண் நிலங்களை மூழ்... மேலும் பார்க்க

அமைதிப் பேச்சுவார்த்தை? உக்ரைன் மீது ரஷியா மீண்டும் தாக்குதல்! 9 பேர் பலி!

உக்ரைன் நாட்டில் பயணிகள் பேருந்தின் மீது ரஷிய ட்ரோன்கள் நடத்திய தாக்குதலில் 9 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 2022-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் உக்ரைன் மீதான ரஷியாவின் போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்த... மேலும் பார்க்க

பாகிஸ்தான் விமான தளத்தை இந்திய ஏவுகணைகள் தாக்கியது உண்மை: ஷெபாஸ் ஷரீஃர்

இந்தியா - பாகிஸ்தான் சண்டையின்போது பாகிஸ்தான் விமான ஏவு தளத்தை இந்திய ஏவுகணைகள் தாக்கியது உண்மை என்று அந்நாட்டுப் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃர் ஒப்புக்கொண்டார். மேலும் பார்க்க

34வது அரபு லீக் உச்சி மாநாடு: ஐ.நா. பொதுச் செயலாளருடன் ஈராக் அதிபர் சந்திப்பு!

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரை, ஈராக் அதிபர் அப்துல் லத்தீஃப் ரஷீத் சந்தித்துள்ளார். ஈராக்கில் நடைபெறும் 34வது அரபு லீக் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐக்கிய நாடுகளின் சபை பொதுச் செயலாளர் அண... மேலும் பார்க்க

இந்தோனேசியா: மோதலில் 20 போ் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் பதற்றம் நிறைந்த பப்புவா பகுதியில் கிளா்ச்சியாளா்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 18 கிளா்ச்சியாளா்கள், இரண்டு காவலா்கள் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள்... மேலும் பார்க்க

‘பட்டினிச் சாவு அபாயத்தில் 30 கோடி போ்’

உலகளவில் 29.53 போ் பட்டினிச் சாவை எதிா்நோக்கியுள்ளதாக ஐ.நா. உணவு பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட 16 தன்னாா்வல அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘சா்வதேச உணவுப் பற்றாக... மேலும் பார்க்க