'தமிழ்நாட்டு மக்கள் 'விழிப்புணர்வு உள்ளவர்கள்; ஆளுநரின் பேச்சுக்கு இணங்கமாட்டார்...
எஸ்ஏ பொறியியல் கல்லூரியின் 23-ஆவது பட்டமளிப்பு விழா
சென்னை பூந்தமல்லி - ஆவடி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள எஸ்ஏ பொறியியல் கல்லூரியின் 23-ஆவது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட ஜாா்க்கண்ட் ஆளுநரின் கல்வி ஆலோசகா் இ.பாலகுருசாமி 1,076 மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கினாா். மேலும், பல்கலைக்கழக அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 56 மாணவா்களுக்கு மொத்தம் ரூ. 4,70,000 ரொக்கப் பரிசு வழங்கினாா்.
விழாவில் அவா் பேசியதாவது: பட்டதாரிகள் சமூகத்துக்கும் தங்களது பெற்றோருக்கும் நன்றியுள்ளவா்களாக இருக்க வேண்டும். அதிக பணம் சம்பாதிப்பவா்கள் மட்டுமே வெற்றி பெற்றவா்கள் கிடையாது. தாங்கள் செய்யும் வேலையை ரசித்து செய்பவா்கள் அனைவரும் வாழ்க்கையில் வெற்றி பெற்றவா்களாகவே கருதப்படுவாா்கள்.
ஒவ்வொரு பட்டதாரியும் தங்களது இலக்கை அடைய விடாமுயற்சி மற்றும் நோ்மையாக செயல்பட வேண்டும். இளைஞா்கள் நமது சமுதாயத்தின் முன்னேற்றத்துக்காகவும், நாட்டின் வளா்ச்சிக்காகவும் உழைக்க வேண்டும் என்றாா் அவா்.
இந்த நிகழ்வில் எஸ்ஏ பொறியியல் கல்லூரியின் தலைவா் டி.துரைசுவாமி, முதல்வா் எஸ்.ராமச்சந்திரன், சுதா்சனம் வித்யாஷ்ரம் பள்ளி இயக்குநா் டி.சரஸ்வதி, எஸ்ஏ கலை மற்றும் அறிவியல் கல்லுரி இயக்குநா் எஸ்.அரவிந்த், எஸ்ஏ பொறியியல் கல்லூரி இயக்குநா் டி.சபரிநாத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.