அதிமுக உள்கட்சி விவகாரத்தில் திமுக தலையிடாது: அமைச்சா் துரைமுருகன்
எஸ்ஏ20 ஏலம்: வரலாறு படைத்த பிரெவிஸ்..! 84 வீரர்கள், ரூ.65 கோடி!
எஸ்ஏ20 கிரிக்கெட் தொடரின் ஏலத்தில் டெவால்டு பிரெவிஸ் அதிகபட்ச தொகைக்கு தேர்வாகி சாதனை படைத்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டெவால்டு பிரெவிஸ் (22 வயது) சிஎஸ்கே அணியில் விளையாடி இந்திய ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் புகழ்ப்பெற்றார்.
வரலாறு படைத்த பிரெவிஸ்
உலகம் முழுவதும் டி20 லீக் போட்டிகள் பிரபலமாகி வருகின்றன. அதன்படி தென்னாப்பிரிக்காவில் கடந்த 2023-இல் எஸ்ஏ20 கிரிக்கெட் தொடர் தொடங்கியது.
இதுவரை 3 சீசன்கள் முடிவடைந்த நிலையில், தற்போது நான்காவது சீசனுக்கான ஏலம் நடைபெற்றது.
இந்த ஏலத்தில் டெவால்டு பிரெவிஸுக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

சௌரவ் கங்குலி பயிற்சி அளிக்கும் பிரிடோரியா கேபிடல்ஸ் அணி 8.3 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது.
இதுதான் எஸ்ஏ20 வரலாற்றில் அதிகபட்ச தொகை என்பது குறிப்பிடத்தக்கது.
84 வீரர்கள், ரூ.65 கோடி செலவு!
இதற்கு முன்பாக டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ரூ.4.6 கோடியில் முதலிடத்தில் இருந்தார்.
தற்போது, இரண்டாவது இடத்தில் எய்டன் மார்க்ரம் ரூ.7 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் ஏலத்தில் வாங்கியது.
மொத்தமாக 6 அணிகள் சுமார் ரூ. 65 கோடியை 84 வீரர்களுக்காக செலவழித்தன. இதில் ரூ.59 கோடி தென்னாப்பிரிக்க வீரர்களுக்காகவும் 11.4 கோடி ரூபாய் 12 யு-23 வீரர்களுக்காகவும் செலழிக்கப்பட்டுள்ளன.
ஜேஎஸ்கே அணியில் வியான் முல்டரை ரூ.4.3 கோடிக்கும் நன்ரி பர்கரை ரூ.3.1 கோடிக்கும் ஏலத்தில் எடுத்தது.
சீசன் 4 போட்டிகள் வரும் டிச.26 முதல் அடுத்தாண்டு ஜனவரி 25 வரை நடைபெற இருக்கின்றன.