சென்னை: தயார் நிலையில் 35 மின்சாரப் பேருந்துகள்; 20 இடங்களில் சார்ஜிங் மையங்கள் ...
எஸ்பிஐ நிகர லாபம் ரூ.19,600 கோடியாகச் சரிவு!
பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) நிகர லாபம் கடந்த மாா்ச் காலாண்டில் ரூ.19,600 கோடியாகச் சரிந்துள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான 2024-25-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.19,600 கோடியாக உள்ளது.
முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 8.34 சதவீதம் குறைவு. அப்போது வங்கி ரூ.21,384 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.
முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் மாா்ச் காலாண்டில் ரூ.1,64,914 கோடியாக இருந்த வங்கியின் மொத்த வருவாய் கடந்த நிதியாண்டின் அதே காலாண்டில் ரூ.1,79,562 கோடியாக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.