செய்திகள் :

ஏஐ தொழில்நுட்பத்துடன் ஸ்மார்ட்போன்! ரூ. 7 ஆயிரம் மட்டுமே!

post image

ஐடெல் நிறுவனத்தில் புதிதாக ஏ 90 என்ற ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை, சிறப்பம்சங்கள் உள்ளிட்டவை குறித்து அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஐடெல் நிறுவனம், பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகிறது.

ஆப்பிரிக்கா, தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா, ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்காவின் சில பகுதிகள் என, வளர்ந்துவரும் நாடுகளின் மின்னணு சந்தையில் குறிப்பிடத்தகுந்த இடங்களை ஐடெல் தயாரிப்புகள் பெற்றுள்ளன.

இந்நிலையில், புதிதாக ஐடெல் ஏ 90 என்ற புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

4ஜி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் குறிப்பிடத்தகுந்த அம்சமாக, நீர்புகாத் தன்மை மற்றும் தூசு தடுப்பான்களைக் கொண்டிருக்கும் வகையில் ஐபி57 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏவியானா 2.0 என்ற செய்யறிவு தொழில்நுட்ப அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. ரூ. 7 ஆயிரம் விலைக்கு ஒரு ஸ்மார்ட்போனில் இந்த சிறப்பம்சங்கள் இடம்பெறுவது அரிதானது.

ஐடெல் ஏ 90 விலை என்ன?

ஐடெல் ஏ 90 ஸ்மாட்போனானது 6.6 அங்குல திரையுடன், மிகுந்த சுமூகமாகப் பயன்படுத்தும் வகையில் 90Hz திறன் கொண்டது. இதில் T7100 என்ற புராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கூடுதலாக 5000mAh திறன் கொண்ட பேட்டரியுடன் 10W சார்ஜிங் அம்சமும் கொடுக்கப்பட்டுள்ளது. பின்பக்கம் 13MP கேமராவும் முன்பக்கம் 8MP செல்ஃபி கேமராவும் கொண்டுள்ளது.

64GB நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ. 6,499க்கும், 128GB நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ. 6,999க்கும் இந்தியாவில் விற்கப்படுகிறது.

பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்ததால், பங்குச் சந்தைகள் உயர்வுடன் முடிவு!

மும்பை: சில்லறை பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16 சதவிகிதமாகக் குறைந்ததால், இன்றைய வர்த்தகத்தில் பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வுட... மேலும் பார்க்க

டாடாவின் அல்ட்ரோஸ் இப்போது புது வடிவில்!

இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான டாடா, அதன் அல்ட்ரோஸ் மாடலை தற்போது புதுப்பித்துள்ளது. முதன்முதலாக 2020ல் அல்ட்ரோஸ் மாடல் முழுமையாக மேம்படுத்தப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். புதிதாக மேம்படுத்... மேலும் பார்க்க

ஷாவ்மிக்கு போட்டியாக விவோவின் புதிய ஸ்மார்ட்போன்!

ஷாவ்மி 16 ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக விவோ நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புதிய எக்ஸ் 300 ப்ரோ மினி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. ஷாவ்மி 16 ஸ்மார்ட்போனில் 6,800mAh பேட்டரி திறன் கொடுக்கப்பட்டுள்ள நிலை... மேலும் பார்க்க

அதிக பேட்டரியுடன் தயாராகும் ஷாவ்மி 16! இந்தியாவில் எப்போது அறிமுகம்?

ஷாவ்மி 16 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் தேதி குறித்து அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதோடு மட்டுமின்றி, ஷாவ்மி 16 ஸ்மார்ட்போனில் இதுவரை இந்நிறுவனத்தின் வேறு எந்த தயாரிப்பிலும் இல... மேலும் பார்க்க

அதிரடியாக விலையுயர்ந்த ஹோண்டா சிட்டி ஹைப்ரிட்!

ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் என்றழைக்கப்படும் எச்இவியின் விலையை அதிரடியாக உயர்ந்துள்ளது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் பிரபலமான செடான் வரிசையில் குறிப்பிடத்தக்க ஒன்று ஹோண்டா சிட்டி. அவ்வப்போது ஹோண்டா சிட்டிய... மேலும் பார்க்க

நாட்டின் சில்லறை பணவீக்கம் 3.16%: 6 ஆண்டுகளில் இல்லாத குறைவு

காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் மற்றும் புரதச்சத்து நிறைந்த பிற உணவுப்பொருள்களின் விலைகள் குறைந்ததால், ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16 சதவீதமாக ... மேலும் பார்க்க