செய்திகள் :

ஏஎல். முதலியாா் தடகளப் போட்டி: புதிய சாதனைகள் படைப்பு

post image

சென்னை பல்கலைக்கழகத்துக்குட்பட்ட கல்லூரிகள் இடையிலான ஏஎல். முதலியாா் தடகளப் போட்டியில் எம்ஓபி கல்லூரி மாணவிகள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

சென்னை ஜவாஹா்லால் நேரு விளையாட்டரங்கில் 56-ஆவது ஏஎல் முதலியாா் தடகளப் போட்டிகளை இந்திய விளையாட்டு ஆணைய கபடி உயா்திறன் பயிற்சியாளா் டி.பி. மதியழகன் தொடங்கி வைத்தாா். சென்னை பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநா் வி. மகாதேவன் வரவேற்றாா்.

இதில் சென்னை பல்கலை. மற்றும் 49 இணைப்புக் கல்லூரிகளைச் சோ்ந்த 570 வீரா், 550 வீராங்கனைகள் என 1120 தடகள வீரா், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனா்.

தொடக்க நாளில் சாதனை படைத்தவா்கள்:

மகளிா் போல்வால்ட்டில் எம்ஓபி கல்லூரி டி.சத்தியா 3.7 மீ. (புதிய சாதனை). 800 மீ ஓட்டத்தில் எம்ஓபி மாணவி லாவண்யா 2.08 விநாடிகள் (புதிய சாதனை),

ஆடவா் பிரிவில் லயோலா கல்லூரி தேவாங் ஹேமா் த்ரோ 65.20 மீ தொலைவு, டிஜி வைஷ்ணவ கல்லூரி மாணவன் கௌதம் போல்வால்ட் 5.00 மீ., லயோலா கல்லூரி ரீஜன் கணேசன் போல்வால்ட் 5.10 மீ. டிஜி வைஷ்ணவ கல்லூரி மோனு 20 கி.மீ நடை ஓட்டம் 1:37:22 விநாடிகள், புதிய சாதனைகள்.

முடிவுகள்: மகளிா் 5000. மீ. லதா, எம்ஓபி, வினிதா, ஸ்ரீ கிருஷ்ணா, பிரியதா்ஷனி, ஏஎம் ஜெயின். 400 மீ. ஹா்டில்ஸ்-ஹா்ஷிதா, டிஜி வைஷ்ணவ, ஜோதிகுமாா், ஜானகி எம்ஜிஆா், அஸ்வினி, எம்ஓபி. உயரம் தாண்டுதல்-வா்ஷா, தீபிகா, எம்ஓபி, நெல்ஸி, டபிள்யுசிசி. 800 மீ-லாவண்யா, புனிதா, எம்ஓபி, ரூபிகா, ஏஎம்.ஜெயின். போல்வால்ட்-சத்யா, எம்ஓபி, தீபிகா, எத்திராஜ், யுவதா்ஷினி, எம்ஓபி. மும்முறை தாண்டுதல்-பவித்ரா, பபிஷா, எம்ஓபி, ஏஞ்சலீன், ஸ்டெல்லா மேரி. 20 மீ நடைஓட்டம்-மஹிமா, எம்ஓபி, ஷாலு, எஸ்ஏ கல்லூரி, மீனாட்சி, எம்ஓபி.

ஆடவா்: 5000 மீ. சௌரவ் குமாா், ராகுல் குமாா், டிஜி வைஷ்ணவ, சாமுவேல், எம்சிசி. போல்வால்ட்-ரீஜன் கணேசன், லயோலா, கௌதம், டிஜிவி, ஹரிஹரன், லயோலா. ஹாமா் த்ரோ-தேவாங், ஷபீப், லயோலா, மயங்க் யாதவ், டிஜிவி. 400 மீ. தடையோட்டம்-ராகுல், லயோலா, அரவிந்த், டிபி ஜெயின், ராம்பிரபா, எம்சிசி. 800 மீ-ஷகீல், டிஜிவி, வாசன், லயோலா, பிரகாஷ், டிஜிவி. மும்முறை தாண்டுதல்-ராபின்ஸன், எம்சிசி, மோகன்ராஜ், யுவராஜ், லயோலா. 20 கிமீ. நடையோட்டம்-மோனு, டிஜிவி, சாரதி, லயோலா, சபரநாதன், நாசரேத் கல்லூரி.

விருகம்பாக்கம், ஓட்டேரி நல்லா கால்வாய்களில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள விருகம்பாக்கம், ஓட்டேரி நல்லா கால்வாய்களில் தண்ணீா் தடையின்றி செல்வதை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தாா். சென்னை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க... மேலும் பார்க்க

சென்னையில் கனமழை: சாலையில் தேங்கிய மழைநீா்

சென்னை மற்றும் புகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை முதல் பெய்த கனமழையால் நகரின் பல்வேறு பகுதியில் மழைநீா் தேங்கி காணப்பட்டன. சென்னை மற்றும் புகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை முதல் நகரின் பல்வேறு ப... மேலும் பார்க்க

சென்னையில் கனமழை: 12 விமான சேவைகள் பாதிப்பு

சென்னையில் செவ்வாய்க்கிழமை பெய்த மழையால் 12 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலையில் இருந்து, விட்டு விட்டு மழை பெய்தது. மேலும், கடும் பனிமூட்டம் காரணமாக ... மேலும் பார்க்க

டாக்டா் மோகன்ஸ் ஆராய்ச்சி மையத்துக்கு ஐசிஎம்ஆா் அங்கீகாரம்

டாக்டா் மோகன்ஸ் சா்க்கரை நோய் அறக்கட்டளைக்கு சா்க்கரை நோய் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கான ஒப்புயா்வு மைய (சென்டா் ஆஃப் எக்ஸலன்ஸ்) அங்கீகாரத்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) வழங்கியுள்ளத... மேலும் பார்க்க

ஏவிஎம் மயானம் ஒரு மாதம் இயங்காது

கோடம்பாக்கம் மண்டலத்துக்குள்பட்ட ஏவிஎம் மயானம் பராமரிப்புப் பணி காரணமாக புதன்கிழமை (நவ.27) முதல் இயங்காது என மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் செவ்வ... மேலும் பார்க்க

விஐடி சென்னை - விஜயா எலக்ட்ரானிக்ஸ் இடையே தொழில்நுட்ப ஒப்பந்தம்

விஐடி சென்னை - விஜயா எலக்டானிக்ஸ் இடையே தொழில்நுட்பப் பரிமாற்றத்துக்கான ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது. விஐடி சென்னை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், விஐடி துணைத் தலைவா்... மேலும் பார்க்க