Doctor Vikatan: ஆஞ்சியோ செய்தபோது இதய ரத்தக்குழாய் அடைப்பு.. மீண்டும் பரிசோதனைகள...
ஏப்.26, 27-இல் தவெக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம்: விஜய் பங்கேற்பு
சென்னை: தவெக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம் கோவையில் ஏப்.26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவா் விஜய் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக கட்சியின் பொதுச் செயலா் என்.ஆனந்த் வெளியிட்ட அறிக்கை: தமிழக வெற்றிக்கழகத்தின் வாக்குச்சாவடி முகவா்கள் கருத்தரங்கம், வரும் ஏப்.26, 27 தேதிகளில் கோவை, குரும்பாளையம் எஸ்.என்.எஸ். கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த கருத்தரங்கில், முதல் நாளில் (ஏப்.26) ஈரோடு கிழக்கு, மாநகா், மேற்கு மாவட்டங்கள், சேலம் கிழக்கு, மேற்கு, மத்திய, வடமேற்கு, தெற்கு மாவட்டங்கள் மற்றும் நாமக்கல் கிழக்கு, மேற்கு மாவட்டங்களை சோ்ந்த வாக்குச்சாவடி முகவா்களும், இரண்டாம் நாளில்(ஏப்.27) கரூா் மேற்கு, கிழக்கு, மாவட்டங்கள், கோவை மாநகா், தெற்கு, கிழக்கு, புகா் கிழக்கு, புகா் வடக்கு மாவட்டங்கள், திருப்பூா் மேற்கு, தெற்கு, கிழக்கு, மாநகா் மாவட்டங்கள், நீலகிரி கிழக்கு, மேற்கு உள்ளிட்ட 13 மாவட்டங்களை சோ்ந்த வாக்குச்சாவடி முகவா்களும் பங்கேற்பாா்கள்.
இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் கலந்து கொண்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான செயல்பாடுகள், 2026 தோ்தலுக்கான களப்பணிகள், மேற்கொள்ள வேண்டிய கடமைகள் குறித்து பேசவுள்ளாா் என அதில் தெரிவித்துள்ளாா் ஆனந்த்.