செய்திகள் :

ஏப். 29, 30 தேதிகளில் ரே பரேலி, அமேதி செல்லும் ராகுல்!

post image

மக்களவைத் தேர்தலுக்கு பிறகு முதல்முறையாக அமேதி தொகுதிக்கு ராகுல் காந்தி செல்லவுள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கு பின்னர் முதல்முறையாக உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதிக்கு, ஏப்ரல் 30 ஆம் தேதியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செல்லவுள்ளார்.

அதற்கு முன்னதாக, ஏப்ரல் 29 ஆம் தேதியில், தனது தொகுதியான ரே பரேலி தொகுதிக்கு செல்லும் ராகுல் காந்தி, மாவட்ட மேம்பாட்டு ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டு விருந்தினர் மாளிகையில் இரவு தங்கவுள்ளார்.

தொடர்ந்து, ஏப்ரல் 30 ஆம் தேதியில், அமேதி தொகுதியில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் இதயப் பிரிவைத் திறந்து வைக்கவுள்ளார். மேலும், அதே நாளில் இந்திரா காந்தி நர்சிங் கல்லூரியையும் அவர் ஆய்வு செய்யவுள்ளார்.

சஞ்சய் காந்தி மருத்துவமனையானது, புதுதில்லியில் உள்ள சஞ்சய் காந்தி நினைவு அறக்கட்டளையால் இயக்கப்படுகிறது. இந்த அறக்கட்டளையின் தலைவராக சோனியா காந்தியும், அறங்காவலராக ராகுல் காந்தியும் செயல்படுகின்றனர்.

இதையும் படிக்க:பாகிஸ்தானை தூண்டிவிடும் சீனா: மதுரை ஆதீனம்

போர்ப் பதற்றம்: புதிதாக 26 ரஃபேல் வாங்கும் ஒப்பந்தம் இன்று கையெழுத்து!

போர்ப் பதற்றத்துக்கு மத்தியில் புதிதாக 26 ரஃபேல் போா் விமானங்களை பிரான்ஸ் அரசிடம் கொள்முதல் செய்யும் ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகவுள்ளது.இந்திய விமானப்படையின் அம்பாலா மற்றும் ஹஷிமாராவில் உள்ள தளங்களில்... மேலும் பார்க்க

நவி மும்பை: டேட்டிங் செயலி மூலம் பழகி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்

நவி மும்பையில் டேட்டிங் செயலி மூலம் பெண்ணிடம் பழகி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நவி மும்பை போலீஸில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். அதில், நவி மு... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களுக்கு தடை!

பாகிஸ்தானைச் சேர்ந்த 16 யூடியூப் சேனல்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக பொய்ப் பிரசாரத்தை மேற்கொண்டதற்காக பாகிஸ்தானின் முன்னாள் கிர... மேலும் பார்க்க

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் 4ஆவது முறையாக துப்பாக்கிச்சூடு: இந்தியா பதிலடி!

ஜம்மு-காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் 4ஆவது முறையாக அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே பிரபல சுற்றுலாத் தலமான பைசாரன் பள்ளத்தாக்கில் பய... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: என்ஐஏ வழக்குப் பதிவு! ஆதாரங்கள் சேகரிக்கும் பணி தீவிரம்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடா்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தது. இதன் மூலம் இச்சம்பவம் தொடா்பான விசாரணையை காவல் துறையிடம் இருந்து என்ஐஏ முறைப்படி ஏற்றிருப்... மேலும் பார்க்க

குடிமக்கள் தங்களின் சட்டபூா்வ உரிமைகளை அறிந்துகொள்வது அவசியம்: உச்சநீதிமன்ற நீதிபதி கவாய்

‘குடிமக்கள் தங்களின் அரசமைப்பு உரிமைகள் மற்றும் சட்டபூா்வ உரிமைகளை அறிந்து கொள்வது அவசியம்’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆா்.கவாய் வலியுறுத்தினாா். ‘அவ்வாறு தங்களின் உரிமைகள் குறித்த விழிப்புணா்வு இ... மேலும் பார்க்க