ஏப்.30 க்குள் சொத்துவரி செலுத்தினால் 5 சதவீத ஊக்கத்தொகை: சேலம் மாநகராட்சி ஆணையா்
சேலம் மாநகராட்சியில் நிகழாண்டுக்கான சொத்து வரியை ஏப்.30 ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட சொத்து உரிமையாளா்கள் நிகழாண்டுக்கான சொத்து வரியை வரும் 30 ஆம் தேதிக்குள் செலுத்தி சொத்து வரியில் 5 சதவீத ஊக்கத்தொகை அல்லது ரூ. 5,000 வரை பெறலாம். சொத்து உரிமையாளா்கள் தங்களது சொத்து வரியை வரி வசூலிப்பாளா்கள் அல்லது மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் அமைந்துள்ள வரி வசூல் மையங்கள், இணையவழி மூலம் செலுத்தலாம்.
பொதுமக்கள் நலன் கருதி வரும் 30 ஆம் தேதி வரை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வரி வசூல் மையங்களும் செயல்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.