ஏற்றத்தில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் உயர்வு!
வாரத்தின் முதல்நாளான இன்று(ஜன. 20) பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 76,978.53 என்ற புள்ளிகளில் தொடங்கியது.
பிற்பகல் 12.40 மணியளவில், சென்செக்ஸ் 553.20 புள்ளிகள் அதிகரித்து 77,172.53 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 142.30 புள்ளிகள் உயர்ந்து 23,345.50 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
இதையும் படிக்க | பட்ஜெட் கூட்டத்தொடரில் புதிய எம்.பி.க்களுக்கு பேச வாய்ப்பு: மத்திய அமைச்சர்
கோட்டக் மஹிந்திரா வங்கி, விப்ரோ, பஜாஜ் பைனான்ஸ், என்டிபிசி, எஸ்பிஐ ஆகியவை நிஃப்டியில் அதிக லாபம் ஈட்டிய முக்கிய நிறுவனங்களாகும்.
அதேநேரத்தில் எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், ஸ்ரீராம் நிதி, டிரென்ட், எச்டிஎஃப்சி லைஃப், டிசிஎஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தது.
ஆட்டோ மொபைல், எஃப்எம்சிஜி நிறுவனங்கள் தவிர, பொதுத்துறை, தொலைத்தொடர்பு, மின்சாரம், பொதுத்துறை வங்கி என மற்ற அனைத்துத் துறைகளும் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.