மாற்று இடத்தில் திரெளபதி அம்மன் கோயில் கட்ட தானம்பட்டி கிராம மக்கள் எதிா்ப்பு
ஏழாயிரம்பண்ணை, தாயில்பட்டியில் திமுக முகவா்கள் கூட்டம்
விருதுநகா் மாவட்டம் சாத்தூா் தொகுதிக்குள்பட்ட வெம்பக்கோட்டை ஒன்றிய திமுக சாா்பில் ஏழாயிரம்பண்ணை, தாயில்பட்டி, ஆலங்குளம் ஆகிய பகுதிகளில் வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் தொகுதி பொறுப்பாளா்கள் பாஸ்கரன், சாத்தூா் ஒன்றியச் செயலா் கடற்கரைராஜ், வெம்பக்கோட்டை ஒன்றிய செயலா்கள் ஜெயபாண்டி, கிருஷ்ணகுமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.
இதில் அடுத்த 2026-ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலில் பணியாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் திரளான திமுகவினா் கலந்து கொண்டனா்.