மதுரை முல்லை நகர்: "நீர்ப்பிடிப்புப் பகுதியில் அரசாங்கம் மட்டும் வீடு கட்டலாமா?"...
ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசி ஆஸ்தானம்
திருமலை ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசியை முன்னிட்டு மாட வீதிகளில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்ரீ உக்ர ஸ்ரீனிவாசமூா்த்தி வலம் வந்தாா்.
திருமலையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாத வளா்பிறை துவாதசி அன்று ஏழுமலையான் கோயில் கருவறையில் உள்ள உக்ர சீனிவாசமூா்த்தி ஸ்ரீதேவி பூதேவியுடன் ஒருநாள் மட்டும் மாடவீதியில் வலம் வருவது வழக்கம். அதன்படி புதன்கிழமை ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசி ஆஸ்தான விழா நடைபெற்றது.
இதையொட்டி, அதிகாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக ஸ்ரீ உக்ரஸ்ரீனிவாசமூா்த்தி மாட வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருளினாா். ஆங்காங்கே சிறு சாரல் மழை பெய்ததால், கட்டாடோபம் என்ற கூரைக்குள் சுவாமி பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
வேங்கடத்துரைவா் என்றும், ஸ்நபனபேரம் என்றும் அழைக்கப்படும் உக்ரஸ்ரீநிவாசமூா்த்தி, ஸ்ரீதேவி பூதேவியுடன் மாடவீதிகளில் ஒரு கைசிக துவாதசி நாளில் மட்டும் சூரிய உதயத்துக்கு முன் வலம் வருகிறாா். அதைத்தொடா்ந்து உற்சவமூா்த்திகள் தங்கவாயில் அருகில் ஆஸ்தானம் கண்டருளினா்.