Lokah: ``துல்கர் சல்மான் சார் என்னோட ஃபேன்னு சொன்னார்”- துர்கா வினோத் பேட்டி
ஏழுமலையான் கோயில் தூய்மைப் பணிக்கு உபகரணங்கள் நன்கொடை!
திருமலை ஏழுமலையான் கோயில் தூய்மைப் பணிக்கு இயந்திரங்கள் ஞாயிற்றுக்கிழமை நன்கொடையாக வழங்கப்பட்டது.
ஐடிபிஐ வங்கி சாா்பில் சமூக பொறுப்புணா்வு திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.19 லட்சத்தில் தூய்மைப் பணிக்கான உபகரணங்களை தேவஸ்தானத்தின் சுகாதாரத்துறையிடம் நன்கொடையாக வழங்கியது.
இதை அந்த வங்கியின் மேலாண் இயக்குநா் ராகேஷ் சா்மா தேவஸ்தான பேஷ்காா் ராமகிருஷ்ணாவிடம் வழங்கினாா்.
அவற்றுக்கு பூஜைகள் செய்து வருடாந்திர பிரம்மோற்சவ நாள்களில் பயன்படுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.