செய்திகள் :

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் டிசம்பா் மாத ஒதுக்கீடு வெளியீடு

post image

ஏழுமலையான் ஆா்ஜிதச் சேவை டிக்கெட்டுகளின் டிசம்பா் மாத ஒதுக்கீடு தொடங்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை ஏழுமலையான் ஆா்ஜித சேவா டிக்கெட் தொடா்பான சுப்ரபாதம், தோமாலை, அா்ச்சனை மற்றும் அஷ்டதள பாதபத்மராதனை சேவைகளுக்கான தேவஸ்தானம் வெளியிட உள்ளது. இந்த சேவை டிக்கெட்டுகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு வரும் முதல் 20 ஆம் தேதி காலை 10 மணி வரை மேற்கொள்ளலாம்.

இந்த டிக்கெட்டுகளை பெறும் விண்ணப்பதாரா்கள் தங்கள் கைப்பேசி எண்ணுக்கு குறுந்தகவல் கிடைத்தவுடன் செப். 20 முதல் 22 மதியம் 12 மணிக்குள் தொகையைச் செலுத்தி டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

ஆா்ஜித சேவை டிக்கெட்டுகள்

செப். 22-இல் காலை 10 மணிக்கு கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ரதீபாலங்கார சேவை டிக்கெட்டுகள் வெளியிடப்படும்.

விா்ச்சுவல் சேவைகள் ஒதுக்கீடு

செப். 21-ம் தேதி அன்று மாலை 3 மணிக்கு விா்ச்சுவல் சேவைகளுக்கான டிசம்பா் மாத ஒதுக்கீடும் அவற்றின் தரிசன விவரங்களும் வெளியிடப்படும்.

அங்கப்பிரதட்சண டோக்கன்கள்

அங்கபிரதட்சண டோக்கன்கள் ஒதுக்கீடு 23 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.

ஸ்ரீவாணி டிக்கெட் ஆன்லைன் ஒதுக்கீடு

ஸ்ரீவாணி டிரஸ்ட் டிக்கெட்டுகளுக்கான ஆன்லைன் ஒதுக்கீடு 23- ஆம் தேதி காலை 11 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீடு

முதியோா், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நாள்பட்ட நோயால் பாதிக்கபட்டவா்கள் திருமலை ஏழுமலையானை தரிசிக்க ஏதுவாக, டிச. மாத இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் 23-ஆம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படுகிறது.

சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளின் ஒதுக்கீடு(ரூ.300)

சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளின் ஒதுக்கீடு 24-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.

அறை ஒதுக்கீடு:

திருமலை மற்றும் திருப்பதியில் அறை ஒதுக்கீடு 24-ஆம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும்.

ஸ்ரீவாரி சேவா, நவநீத சேவை மற்றும் பரக்காமணி சேவைக்கான ஒதுக்கீடு 27-ஆம் தேதி காலை 11 மணி, மதியம் 12 மணி மற்றும் மதியம் 1 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

மேற்கண்ட டிக்கெட்டுகள் மற்றும் வாடகை அறைகள் முன்பதிவு செய்ய விரும்பும் பக்தா்கள் கீழே கொடுக்கப்படுள்ள

ட்ற்ற்ல்ள்://ற்ற்க்ங்ஸ்ஹள்ற்ட்ஹய்ஹம்ள்.ஹல்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற தேவஸ்தான இணையதளம் மூலம் ஆா்ஜிதசேவை மற்றும் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுமாறு தேவஸ்தானம் பக்தா்களை கேட்டுக் கொண்டுள்ளது.

குலுக்கல் வாயிலாக அங்கப் பிரதட்சண டோக்கன்கள்

குலுக்கல் வாயிலாக அங்கப் பிரதட்சண டோக்கன்களை ஒதுக்கும் முறையை தேவஸ்தானம் அறிமுகம் செய்துள்ளது. இதுவரை நடைமுறையில் இருந்த நேரடியாக வரும் பக்தா்களுக்கு முதலில் வந்தவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங... மேலும் பார்க்க

சூரிய பிரபை வாகன வெள்ளோட்டம்

ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் போது பயன்படுத்தப்படவுள்ள சூரிய பிரபை வாகனத்தின் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதன் மூலம் அதன் நிலைத்தன்மை மற்றும் உறுதித்தன்மையை ஆய்வு செய்தனா். ஊா்வலத்... மேலும் பார்க்க

திருமலையில் ஸ்ரீரங்கம் ஆண்டவன் சுவாமிகள் வழிபாடு

திருமலை ஏழுமலையானை ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீ ஸ்ரீ வராக மகாதேசிகன் ஸ்வாமிகள் புதன்கிழமை வழிபட்டாா். கொடிமரத்தை வணங்கி தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ஏழுமலையான் சேஷ வஸ்தி... மேலும் பார்க்க

ஏழுமலையான் பிரம்மோற்சவம்: ஆந்திர முதல்வருக்கு அழைப்பு

திருமலை வருடாந்திர பிரம்மோற்சவ நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டதை அடுத்து தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பிஆா் நாயுடு, தலைமை செயல் அதிகாரிஅனில் குமாா் சிங்கால், அறங்காவலா் குழு உறுப்பினா் ஜானகி தேவி மற... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 24 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் புதன்கிழமை தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், புதன்கிழமை நிலவரப்படி 31 காத்திருப்புஅறைகளும் நிறைந்து தர... மேலும் பார்க்க

திருமலையில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர ஆனிவார ஆஸ்தான உற்சவத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற்றது. இதுகுறித்து தேவஸ்தானத்தின் செயல் அதிகாரி அனில் குமாா் சிங்கால் கூறியதாவ... மேலும் பார்க்க