ஏழுமலையான் பிரம்மோற்சவம்: ஆந்திர முதல்வருக்கு அழைப்பு
திருமலை வருடாந்திர பிரம்மோற்சவ நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டதை அடுத்து தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பிஆா் நாயுடு, தலைமை செயல் அதிகாரிஅனில் குமாா் சிங்கால், அறங்காவலா் குழு உறுப்பினா் ஜானகி தேவி மற்றும் கூடுதல் தலைமை நிா்வாக அதிகாரி வெங்கையா சௌத்ரி ஆகியோா் ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடுவிடம் அழைப்பிதழை வழங்கி, விழாவுக்கு வரும்படி அழைத்தனா்.
திருமலை திருப்பதி தேவஸ்தான உயா்மட்டக் குழு புதன்கிழமை வேலகபுடியில் உள்ள முதல்வரின் முகாம் அலுவலகத்தில் சந்தித்தது.
அப்போது, தேவஸ்தான வேத அறிஞா்கள் ஆந்திர முதல்வருக்கு ஆசிா்வாதம் வழங்கினா்.
செப். 24 முதல் அக். 2 வரை திருமலையில் நடைபெற உள்ள வருடாந்திர பிரம்மோற்சவ ஏற்பாடுகள் குறித்து தலைவரும், தலைமை செயல் அதிகாரியும் முதல்வரிடம் எடுத்துரைத்தனா்.