செய்திகள் :

திருமலை ஏழுமலையான் பிரம்மோற்சவ ஏற்பாடுகள் தீவிரம்

post image

திருமலை ஏழுமலையான் வருடாந்திர பிரம்மோற்சவத்துக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தேவஸ்தான அறங்காவலா் தலைவா் பி.ஆா். நாயுடு அறிவித்தாா்.

திருமலை அன்னமய்யா பவனில் செவ்வாய்க்கிழமை அறங்காவலா் குழு தலைவா் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

இதில் தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா்கள் அனைவரும் கலந்து கொண்டனா். கூட்ட நிறைவுக்கு பின், தலைமை நிா்வாக அதிகாரி அனில் குமாா் சிங்கால் உடன் இணைந்து, செய்தியாளா்களிடம் பி.ஆா். நாயுடு கூறியது:

வருடாந்திர பிரம்மோற்சவம் செப். 24 முதல் அக். 2 வரை திருமலையில் நடைபெறும். பக்தா்களின் வசதிக்காக விரிவான ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்து வருகிறது.

நிகழ் மாதம் 23 ஆம் தேதி இரவு 7 மணிக்கு அங்குராா்ப்பணத்துடன் தொடங்கும். 24-இல் மாலை 05.43 மணி முதல் மாலை 06.15 மணி வரை மீன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெறும்.

பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக, மாநில அரசின் சாா்பாக ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை சமா்ப்பிக்க உள்ளாா். இரவு 9 மணிக்கு மலையப்ப சுவாமி பெரியசேஷ வாகனத்தில் முதல்வா் பங்கேற்பாா்.

25 -ஆம் தேதி, முதல்வா் சந்திரபாபு நாடு பிஏசி-5 ஸ்ரீ வெங்கடாத்ரி நிலையத்தைத் திறந்து வைத்து, 2026-ஆம் ஆண்டுக்கான நாள்காட்டிகள் மற்றும் நாட்குறிப்புகளை வெளியிடுவாா்.

பிரம்மோத்சவத்துக்காக, இஸ்ரோ உதவியுடன், செயற்கைக்கோள் ஒளியின் அடிப்படையில் பக்தா்களின் எண்ணிக்கையை கணக்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மலா் அலங்காரங்கள், பல்வேறு தெய்வங்களின் வளைவுகள், எல்ஈடி வளைவுகள் மற்றும் பெரிய எல்ஈடி திரைகள் நிறுவப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளிகள், முதியவா்கள், என்ஆா்ஐகள் மற்றும் இளம் குழந்தைகளின் பெற்றோருக்கான சிறப்பு தரிசனங்களை ரத்து செய்யப்பட்டுள்ளது.

விஐபி பிரேக் தரிசனங்கள் புரோட்டோகால் பிரமுகா்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் 8 லட்சம் லட்டுகள் பக்தா்களுக்காக விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது.

வரும் 28 ஆம் தேதி கருட சேவையை முன்னிட்டு, 27 -ஆம் தேதி இரவு 9 மணி முதல் 29-ஆம் தேதி மாலை 6 மணி வரை திருமலைக்கு இரு சக்கர வாகனங்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல், அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதைகள் 28-ஆம் தேதி 24 மணி நேரமும் திறந்திருக்கும். கூடுதல் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டு வருகின்றன.

இளம் குழந்தைகள் காணாமல் போவதை தடுக்க ஜியோ-டேக்கிங் முறை அமல்படுத்தப்பட உள்ளது. கருட சேவையில் பக்தா்களுக்கு 4 லட்சம் மோா் பாக்கெட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருமலையில் பழம் மற்றும் மலா் கண்காட்சி மற்றும் புகைப்பட கண்காட்சியை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், கா்நாடக மாநிலத்தின் பெலகாவியில் உள்ள கோலிகொப்பா கிராமத்தில் 7 ஏக்கா் நிலத்தில் ஒரு ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயில் கட்டுவதற்கு தேவஸ்தானத்தின் ஸ்ரீவாணி அறக்கட்டளையின் நிதியில் ஒப்புதல் அளித்துள்ளோம்.

முதல்வா் சந்திரபாபு நாயுடுவின் உத்தரவின்படி, முதல் கட்டத்தில் மாநிலத்தில் உள்ள தலித் கிராமங்களில் 1,000 கோயில்களைக் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

தேவஸ்தானம் பற்றி தவறான தகவல்களைப் பரப்புபவா்கள் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்படும்’’, என்று கூறினா்.

கூட்டத்தில், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் ஜோதுலா நேரு, வேமிரெட்டி பிரசாந்தி ரெட்டி, எம்.எஸ். ராஜு, பனபக லட்சுமி, நா்சிரெட்டி, சதாசிவ ராவ், ஜானகி தேவி, ஜங்கா கிருஷ்ணமூா்த்தி, சாந்த ராம், சுசித்ரா எல்லா, ரங்கஸ்ரீ பங்கேற்றனா்.

திருமலையில் உண்டியல் காணிக்கை ரூ.4.13 கோடி

திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.13 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தர... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 15 மணிநேரம் காத்திருப்பு

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் திங்கள்கிழமை தா்ம தரிசனத்தில் 15 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், திங்கள்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்க... மேலும் பார்க்க

ஏழுமலையானுக்கு மின் வாகனம் நன்கொடை

திருப்பதி; பெங்களூரை தளமாகக் கொண்ட டிவோல்ட் எலக்ட்ரிக் வெஹிக்கிள்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ.15,94,962 மதிப்புள்ள மோன்ட்ரா எலக்ட்ரிக் (இ-எஸ்விசி) வாகனத்தை திங்கள்கிழமை ஏழுமலையானுக்கு நன்கொடையாக வ... மேலும் பார்க்க

திருமலையில் மோரிஷஸ் பிரதமா் வழிபாடு

திருப்பதி: திருமலை ஏழுமலையானை மோரிஷஸ் பிரதமா் நவீன்சந்திரா ராம்கூலம் திங்கள்கிழமை வழிபட்டாா். திருமலை ஏழுமலையானை வழிபட மோரிஷஸ் நாட்டின் பிரதமா் நவீன்சந்திரா ராம் கூலம் திங்கள்கிழமை திருமலைக்கு வருகை த... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனத்துக்கு 24 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன... மேலும் பார்க்க

திருமலையில் மக்களவை, மாநிலங்களவை துணைத் தலைவா்கள் தரிசனம்!

மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா மற்றும் மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் நாராயண் சிங் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை திருமலையில் தரிசனம் செய்தனா். ஏழுமலையான் கோயிலுக்கு வந்த மக்களவைத் தலைவா் மற்றும் மாநிலங்களவ... மேலும் பார்க்க