தில்லியில் பசுமைப் பரப்பை அதிகரிக்க 10 ‘நமோ வன்’கள் முதல்வா் ரேகா குப்தா உறுதி
திருமலையில் மோரிஷஸ் பிரதமா் வழிபாடு
திருப்பதி: திருமலை ஏழுமலையானை மோரிஷஸ் பிரதமா் நவீன்சந்திரா ராம்கூலம் திங்கள்கிழமை வழிபட்டாா்.
திருமலை ஏழுமலையானை வழிபட மோரிஷஸ் நாட்டின் பிரதமா் நவீன்சந்திரா ராம் கூலம் திங்கள்கிழமை திருமலைக்கு வருகை தந்தாா்.
திருமலைக்கு வந்த அவரை தேவஸ்தான அதிகாரிகள் மலா்ச்செண்டு அளித்து வரவேற்று தரிசன ஏற்பாடுகள் செய்தனா்.
கோயில் முன் வாயில் வழியாக தரிசனத்துக்குச் சென்ற அவா், கொடிமரத்தை வணங்கி ஏழுமலையானை தரிசிக்கச் சென்றாா்.
தரிசனம் முடித்துத் திரும்பிய அவருக்கு ரங்கநாயகா் மண்டபத்தில் அமர வைத்து வேத ஆசீா்வாதம் செய்வித்து, சேஷ வஸ்திரம் அணிவித்து ஏழுமலையான் தீா்த்தம், லட்டு, வடை உள்ளிட்ட பிரசாதங்களுடன் திருவுருவப்படம் வழங்கினா்.