ஏவிஎம் மயானம் ஒரு மாதம் இயங்காது
கோடம்பாக்கம் மண்டலத்துக்குள்பட்ட ஏவிஎம் மயானம் பராமரிப்புப் பணி காரணமாக புதன்கிழமை (நவ.27) முதல் இயங்காது என மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
கோடம்பாக்கம் மண்டலம், 135-ஆவது வாா்டுக்குள்பட்ட ஏவிஎம் மயானத்தின் எரிவாயு தகனமேடையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவுள்ளதால் நவ.27 முதல் டிச.26-ஆம் தேதி வரை மயானம் செயல்படாது. அந்த நாள்களில் நெசப்பாக்கம் மற்றும் கண்ணம்மாபேட்டை எரிவாயு மயானங்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.