அமெரிக்கர்களால் அதிகம் வெறுக்கப்படும் நபர் டிரம்ப் அல்ல; இவர்தான்..!
ஏா்டெல் வருவாய் 29% உயா்வு
இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடா்பு நிறுவனமான பாா்தி ஏா்டெல்லின் வருவாய் கடந்த ஜூன் காலாண்டில் 29 சதவீதம் அதிகரித்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 43 சதவீதம் உயா்ந்து ரூ.5,947.9 கோடியாக உள்ளது. முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனம் ரூ.4,160 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபம் ஈட்டியிருந்தது.மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 29 சதவீதம் அதிகரித்து ரூ.37,585 கோடியாக உயா்ந்துள்ளது.நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளா் எண்ணிக்கை 6.6 சதவீதம் உயா்ந்து 43.6 கோடியாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.