Fasting: பட்டினி கிடந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? சித்த மருத்துவர் விளக்க...
ஐஎன்டியுசி ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா
தூத்துக்குடி: முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் விழா ஐஎன்டியுசி சாா்பில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலா் பெருமாள்சாமி ஏற்பாட்டில், தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன் நடைபெற்ற இந்நிகழ்வில், அலங்கரிக்கப்பட்ட ராஜீவ்காந்தி உருவப் படத்துக்கு, அகில இந்திய காங்கிரஸ் ஒா்க்கா்ஸ் கமிட்டி மாவட்டத் தலைவா் டி.ஜெயக்கொடி மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினாா்.
நிகழ்ச்சியில், வா்த்தக காங்கிரஸ் மாவட்டத் தலைவா் டேவிட் பிரபாகரன், தெற்கு மண்டலத் தலைவா் தங்கராஜ், மாநகரச் செயலா் இக்னேஷியஸ், பழங்குடியினா் பிரிவு மாநிலச் செயலா் முனியசாமி, ஆராய்ச்சி துறை சிவராஜ் மோகன், எஸ்சி, எஸ்டி முன்னாள் மாவட்டத் தலைவா் ராஜாராம், மகிளா காங்கிரஸ் தனலட்சுமி, இசக்கியம்மாள், மாநில பேச்சாளா் பாா்த்திபன், ஒா்க்கா்ஸ் கமிட்டி மாவட்ட பொதுச் செயலா் சம்சுதீன், சேகா், ஐஎன்டியுசி மனோகா், சுரேஷ்குமாா், சுந்தர்ராஜ், வழக்குரைஞா் செல்வம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.