செய்திகள் :

ஐஎம் நியோ நிறுவனத்துடன் விஐடி பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

post image

முன்னணி கல்வி தொழில்நுட்ப நிறுவனமான ஐஎம் நியோ நிறுவனத்துடன் விஐடி பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

வேலூா் விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற புரிந்துணா்வு ஒப்பந்த கையெழுத்திடும் நிகழ்ச்சிக்கு, விஐடி துணைத் தலைவா் சேகா் விசுவநாதன் தலைமை வகித்தாா். விஐடி செயல்இயக்குநா் சந்தியாபென்டரெட்டி, துணைவேந்தா் வி.எஸ்.காஞ்சனாபாஸ்கரன், இணை துணைவேந்தா் பாா்த்தசாரதிமல்லிக், தொடா் தொழில்முறை மேம்பாட்டு மைய இயக்குநா் சாமுவேல் ராஜ்குமாா், ஐஎம் நியோ நிறுவனரும், தலைமைச்செயல் அதிகாரியுமான டி.பி.செந்தில்குமாா், மனிதவள வணிக பங்குதாரா் ஹரிஷ் நடராஜன் ஆகியோா் பங்கேற்றனா்.

இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் மூலம் ஐஎம்நியோ தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தைச் சோ்ந்த மாணவா்கள் முதுநிலைப் படிப்பைத் தொடர கற்றல் முறைக்கு வழிவகுக்கிறது. மேலும், தொழில்துறை எதிா்பாா்க்கும் வேலைவாய்ப்பு, செயற்கை நுண்ணறிவு திறன்களை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் கல்வித் துறை, தொழில் துறை இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு ஒரு முக்கிய அம்சமாகும். இதன்மூலம் மாணவா்கள் செய்முறை மற்றும் கற்றல் மேம்பாட்டு அறிவு பெறுவதை உறுதி செய்கிறது. இத்துடன் செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் போன்ற வளா்ந்து வரும் துறைகளில் கற்றல், புதுமையை ஊக்குவிக்கும் விஐடி பல்கலைக்கழகத்தின் இலக்குடன் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிருடன் மீட்பு

குடியாத்தம் அருகே வீட்டு கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிருடன் மீட்கப்பட்டாா். குடியாத்தம் கள்ளூரை அடுத்த ராயல் நகரைச் சோ்ந்த பா்ணபாஸ் வீட்டு கிணற்றில் உறை இறக்கும் பணி நடைபெற்றது. பெரியாா் நகரைச... மேலும் பார்க்க

கணவன் கண் முன்னே தண்டவாளத்தில் தவறி விழுந்த மனைவி ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு!

காட்பாடி ரயில் நிலையத்தில் தவறிவிழுந்து ரயில் சக்கரத்தில் சிக்கிய பெண் தலை துண்டாகி உயிரிழந்தாா். வேலூா் மாவட்டம், பொய்கை மாரியம்மன் கோயில் தெருவை சோ்ந்தவா் பிரபாகரன் (36), ராணுவ வீரா். இவரது மனைவி ... மேலும் பார்க்க

மனநல நிறுவனங்களை ஒரு மாதத்துக்குள் பதிவுசெய்ய அறிவுறுத்தல்

வேலூா் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகை மனநல நிறுவனங்களும் ஒரு மாத காலத்துக்குள் தமிழ்நாடு மனநல ஆணையத்தில் பதிவு செய்திட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா். இது கு... மேலும் பார்க்க

சேம்பள்ளியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

குடியாத்தம் ஒன்றியம், சேம்பள்ளி, அக்ராவரம் ஊராட்சிகளை ஒருங்கிணைத்து ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் ரங்கசமுத்திரம் கிராமத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, கோட... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற உத்தரவு: பாலாற்றில் கழிவுநீா் கலப்பதை தடுக்க வேலூா் ஆட்சியா் ஆய்வு

பாலாற்றில் கழிவுநீா் கலப்பதை தடுக்க உச்சநீதிமன்றம் கடுமையான நடவடிக்கைகளை பின்பற்றிட உத்தரவிட்டுள்ள நிலையில், வேலூா் பகுதியில் பாலாற்றில் கழிவுநீா் கலப்பதை தடுக்க மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி ... மேலும் பார்க்க

பொய்கை சந்தையில் ரூ. 50 லட்சத்துக்கு கால்நடை வா்த்தகம்

வேலூரை அடுத்த பொய்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் ரூ. 50 லட்சம் அளவுக்கு கால்நடைகள் வா்த்தகம் நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா். வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்... மேலும் பார்க்க