செய்திகள் :

ஐஐடி தகுதித் தேர்வில் கல்வராயன் மலை பழங்குடி மாணவி சாதனை - முழு கல்விச் செலவையும் ஏற்கும் தமிழக அரசு

post image

கல்வராயன் மலைப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மாணவி ராஜேஷ்வரி, ஐஐடி தகுதித் தேர்வான ஜேஇஇ அட்வான்ஸ்ட் 2025 (JEE Advance 2025) தேர்வில் தேர்ச்சி பெற்று தேசிய அளவில் 417-வது இடம்பிடித்து சாதனை படைத்திருக்கிறார்.

உடல்நலக்குறைவால் தந்தை உயிரிழந்த ஓராண்டில் கடுமையாகப் படித்து, ஐஐடி தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதைத்தொடர்ந்து சென்னை ஐஐடி-யில் கால்தடம் பதிக்கவிருக்கும் மாணவி ராஜேஷ்வரியைப் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

பழங்குடியின மாணவி ராஜேஸ்வரி
பழங்குடியின மாணவி ராஜேஸ்வரி

இந்த நிலையில், மாணவி ராஜேஸ்வரியின் ஐஐடி படிப்புச் செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் எனத் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் ஸ்டாலின், "தந்தையை இழந்தாலும், அவர் கனவைத் தன் நெஞ்சில் சுமந்து நனவாக்கியிருக்கும் அரசு உறைவிடப் பள்ளி மாணவி ராஜேஷ்வரியின் சாதனைக்கு என் சல்யூட். அவரது உயர்கல்விச் செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் என மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன். ராஜேஷ்வரி போன்ற நமது மகள்கள் மேலும் பலர் சேருவதுதான் IIT-க்கு உண்மையான பெருமையாக அமையும்! அதற்காக நமது திராவிட மாடல் அரசு தொடர்ந்து உழைக்கும்." என்று பதிவிட்டிருக்கிறார்.

மேலும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "சேலம் மாவட்டம் கல்வராயன்மலை அருகே வசித்து வரும் கருமந்துறை பழங்குடி இனத்தை சேர்ந்த செல்வி. ராஜேஷ்வரி, 12-ம் வகுப்பில் 521 மதிப்பெண்களும், JEE தேர்வில் இந்திய அளவில் 417-வது இடத்தையும் பிடித்து, சென்னை ஐஐடி-யில் இடம் கிடைத்துள்ள செய்தி கேட்டு மகிழ்வுற்றேன்.

மாணவி ராஜேஷ்வரிக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகள். தனது தந்தையாரை கடந்த 2024-ல் புற்றுநோயால் இழந்த நிலையிலும், ராஜேஸ்வரி உழைத்து பெற்றுள்ள இந்த வெற்றி மெச்சத்தக்கது.

கல்வி ஒன்றே சமூக முன்னேற்றத்தின் வழி. மாணவி ராஜேஷ்வரி உயர்கல்வியிலும் சிறக்க வாழ்த்துகிறேன்." என்று எக்ஸ் தளத்தில் வாழ்த்தியிருக்கிறார்.

JEE: முதன்முறையாக ஐஐடியில் படிக்கத் தகுதிபெற்ற பழங்குடி மாணவி; இந்தியளவில் சாதனை படைத்த கதை!

சேலம் மாவட்டம், கல்வராயன் மலை, கருமந்துறை கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவரது தந்தை ஆண்டி.கடந்த 2023 ஆம் ஆண்டு புற்றுநோய் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். தாய் கவிதா கூலித்தொழில் செய்து வருகிறார... மேலும் பார்க்க

`அரசுப் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பினால், சொத்து வரி ரத்து' - மகாராஷ்டிரா கிராமத்தில் புது திட்டம்

கிராமங்களுக்கு வருவாய் கொடுப்பதில் சொத்து வரி முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த சொத்து வரியை வசூலிக்க பஞ்சாயத்து ஊழியர்கள் போராடுவதுண்டு. அதே போன்று கிராமங்களில் இருக்கும் அரசுப் பள்ளிக்கு குழந்தைகளை படி... மேலும் பார்க்க

கேரளா: "அங்கன்வாடியில் உப்புமாவுக்குப் பதில் முட்டை பிரியாணி" - சிறுவன் கோரிக்கையை ஏற்ற அரசு

கேரளாவைச் சேர்ந்த சங்கு என்ற சிறுவன் அங்கன்வாடிகளில் பிரியாணி வழங்க வேண்டும் எனப் பேசும் வீடியோ ஒன்று கடந்த ஆண்டு வைரலானது.கேரள பெண்கள், குழந்தைகள் வளர்ச்சித்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், அப்போது அதற்குப... மேலும் பார்க்க

ஊட்டி: ``அட்மிஷன் போட்டால் ரூ.5000 டெபாசிட்!'' - அரசுப் பள்ளியில் அடேங்கப்பா பிளான்!

கோடை விடுமுறை நிறைவடைந்திருக்கும் நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டு நடப்பு கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் நேற்றிலிருந்து தொடங்கியிருக்கிறது. பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கீள... மேலும் பார்க்க