ஐபிஎல் அறிமுகப் போட்டியில் அசத்திய டாப் 5 பந்துவீச்சாளர்கள்!
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய அஸ்வனி குமார் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.
ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதையும் படிக்க: எந்த அணிக்கும் இந்த நிலை வரலாம்; கேகேஆர் தோல்வி குறித்து ரமன்தீப் சிங்!
இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய அஸ்வனி குமார் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அஜிங்க்யா ரஹானே, ரிங்கு சிங், மணீஷ் பாண்டே மற்றும் ஆண்ட்ரே ரஸலின் விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி அசத்தினார். ஐபிஎல் அறிமுகப் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
ஐபிஎல் அறிமுகப் போட்டியில் அசத்திய டாப் 5 பந்துவீச்சாளர்கள் விவரம்
Storming into a special list
— IndianPremierLeague (@IPL) March 31, 2025
Ashwani Kumar grabbed his opportunity and has made a name in #TATAIPLpic.twitter.com/5AigDeKESg
6/12 - அல்சாரி ஜோசப் (மும்பை இந்தியன்ஸ்) - சன்ரைசர்ஸுக்கு எதிராக, 2019
5/17 - ஆண்ட்ரூ டை (குஜராத் லயன்ஸ்) - ரைசிங் புணே சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிராக, 2017
4/11 - சோயப் அக்தர் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) - தில்லி டேர்டேவில்ஸுக்கு எதிராக, 2008
4/24 - அஸ்வனி குமார் (மும்பை இந்தியன்ஸ்) - கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக, 2025
4/26 - கெவான் கூப்பர் (ராஜஸ்தான் ராயல்ஸ்) - கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு எதிராக, 2012