செய்திகள் :

ஐபிஎல் 2025: மும்பை அணியில் இணைந்த கேப்டன் ஹார்திக் பாண்டியா!

post image

சாம்பியன்ஸ் டிராபியை வென்ற கையோடு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா அதன் அணியில் இணைந்தார்.

துபையில் நடந்துமுடிந்த சாம்பியன்ஸ் டிராபியில் 6 பந்துகள் மீதமிருந்த நிலையில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்று அசத்தியது.

இதனைத் தொடர்ந்து ஐபிஎல் அணியில் விளையாடும் ஒவ்வொருவரும் தங்களது சொந்த அணிக்கு திரும்பி வருகிறார்கள்.

ஹார்திக் பாண்டியா அணியில் இணைந்ததை குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி, “துப்பாக்கி வந்தடைந்தது” எனக் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதிய கேப்டனாக ஹார்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார். ரோஹித்துக்கு பதிலாக நியமிக்கப்பட்டதால் ரசிகர்கள் அவரை மிகவும் கேலி செய்தார்கள்.

கடந்த முறை பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறாமல் சென்ற மும்பை அணி இந்தமுறை 6ஆவது கோப்பையை வெற்றிபெறும் முனைப்பில் இருக்கிறது.

ஆல்-ரவுண்டரான ஹார்திக் பாண்டியா பேட்டிங்கில் நம்.7இல் களமிறங்குவார், வேகப் பந்துவீச்சிலும் அசத்துவார்.

மும்பையின் முதல் போட்டி வரும் மார்ச்.23ஆம் தேதி சிஎஸ்கேவுடன் மோதவிருக்கிறது. முதல் போட்டியில் பாண்டியா விளையாடமாட்டார். கடந்தாண்டு மெதுவாக பந்துவீசியதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டது.

ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருதை முதல்முறையாக வென்ற அலானா கிங்..!

சர்வதேசப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஒவ்வொரு வீரர் மற்றும் வீராங்கனைக்கு ஒவ்வொரு மாதமும் ஐசிசி விருது வழங்கப்படுகிறது. பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான ஐசிசி வ... மேலும் பார்க்க

சிறந்த வீரருக்கான ஐசிசியின் விருதை 3ஆவது முறையாக வென்ற ஷுப்மன் கில்..!

ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களில் ஒருவருக்கு அம்மாதத்துக்கான சிறந்த வீரர் விருதினை ஐசிசி வழங்கி வருகிறது. அந்த வகையில் பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கா... மேலும் பார்க்க

இந்திய கிரிக்கெட் வாரியமாக செயல்படும் ஐசிசி..! மே.இ.தீ. லெஜண்ட் கடும் விமர்சனம்!

மே.இ.தீ. அணியின் வேகப் பந்து வீச்சாளர்களின் தந்தையாக கருதப்படும் ஆண்டி ராபட்ஸ் ஐசிசியின் நடவடிக்கைகள் இந்தியாவுக்கு சாதகமாக இருப்பதாக கடுமையாக விமர்சித்துள்ளார்.ஐசிசி என்பது சர்வதேச கிரிக்கெட் வாரியமா... மேலும் பார்க்க

இன்டர்நேஷ்னல் மாஸ்டர் லீக்: இந்தியா உள்பட 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேற்றம்!

இன்டர்நேஷ்னல் மாஸ்டர் லீக் கிரிக்கெட் தொடரில் இந்தியா உள்பட 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேற்றமடைந்துள்ளது. மார்ச்.1 முதல் மாஸ்டர்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா, ஆஸ... மேலும் பார்க்க

ஐசிசி ஒருநாள் தரவரிசை: ரோஹித் சர்மா, ரச்சின் அதிரடி முன்னேற்றம்! கோலிக்கு சரிவு!

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, நியூசிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் அதிரடியாக முன்னேற்றம் பெற்றுள்ளனர்.சர்வதேச கிரிக்கெட் தரவரிசைப் பட்டியல் வா... மேலும் பார்க்க

பிசிசிஐ ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்ட பின் வாழ்வில் நிறைய கற்றுக்கொண்டேன்! -ஷ்ரேயஸ்

பிசிசிஐ ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்ட பின் வாழ்வில் நிறைய கற்றுக்கொண்டதாக இந்திய நட்சத்திர வீரர் ஷ்ரேயஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி அசத்தலாக வி... மேலும் பார்க்க