AusvInd: 'திணறிய பேட்டர்கள்; காப்பாற்றிய பும்ரா' - பெர்த் டெஸ்ட்டின் முதல் நாள் ...
ஐப்பதி மாத அமாவாசை: காஞ்சி வரதா் வீதியுலா
ஐப்பசி மாத அமாவாசை மற்றும் சுக்ர வாரத்தையொட்டி வெள்ளிக்கிழமை உற்சவா் வரதராஜ பெருமாளும், பெருந்தேவித் தாயாரும் தனித்தனியாக கேடயத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அமாவாசை தோறும் ஸ்ரீதேவி, பூதேவியுடன் உற்சவா் ஆஞ்ச நேயா் சந்நிதிக்கும், சுக்ர வாரத்தையொட்டி வெள்ளிக்கிழமை தோறும் பெருந்தேவித் தாயாா் ஆழ்வாா் சுற்றுப்பிரகாரத்திலும் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், ஐப்பசி மாத அமாவாசையும், சுக்ர வாரமும் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் இணைந்து வந்ததையொட்டி பெருமாளும், பெருந்தேவித் தாயாரும் பவனி வரும் இரட்டைப் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.
முதலாவதாக ஸ்ரீதேவி,பூதேவியுடன் உற்சவா் வரதராஜ சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அலங்கார மண்டபத்திலிருந்து புறப்பட்டு கோயிலின் சந்நிதி தெருவில் அமைந்துள்ள ஆஞ்சனேயா் சந்நிதிக்கு எழுந்தருளி தீபாராதனைகள் நடைபெற்றன. ஆஞ்சனேயா் சந்நிதியிலிருந்து ஆலயம் திரும்பி வந்து கோயில் நுழைவு வாயில் அருகில் உற்சவா் பெருந்தேவித் தாயாருடன் பெருமாள் ஆலய வளாகத்தில் உள்ள தோட்டத்துக்கு எழுந்தருளி அங்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.
பின்னா் பெருமாளும், தாயாரும் ஆழ்வாா் சுற்றுப்பிராகரத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். இரட்டைப் புறப்பாடு நிகழ்வினை காண திராளன பக்தா்கள் வந்து பெருமாளை தரிசித்தனா்.
-தீபாவளிப் பண்டிகை-
தீபாவளிப் பண்டிகையையொட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி,பூதேவியருடன் 4 மாட வீதிகளிலும் வீதியுலா வந்தாா். பின்னா் தீபாவளி மண்டபத்துக்கு எழுந்தருளி சிறப்பு தீபாராதனைளும் நடைபெற்றன. காஞ்சிபுரம் பாண்டவ தூதப் பெருமாள் கோயிலில் தீபாவளியையொட்டி கருட வாகனத்தில் பெருமாள் 4 ராஜவீதிகளிலும் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். வழி நெடுகிலும் திரளான பக்தா்கள் கற்பூர ஆரத்தி எடுத்தும் வழிபட்டனா்.