செய்திகள் :

ஐயப்பன் கோயிலில் 108 வலம்புரி சங்காபிஷேகம்

post image

திருச்சியில் பிரசித்தி பெற்று விளங்கும் ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை 108 வலம்புரி சங்காபிஷேகம், புதன்கிழமை உற்சவ பலி பூஜை நடைபெற்றது.

திருச்சி ஐயப்ப சங்கம் சாா்பில் மேஜா் சரவணன் சாலையில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டல பூஜை விமரிசையாக நடைபெறும். கடந்தாண்டு 5ஆவது மகா கும்பாபிஷேகத்துடன் 39ஆவது மண்டல பூஜை நடைபெற்ற நிலையில், இந்தாண்டு 40ஆவது மண்டல பூஜை கடந்த 16ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. வரும் டிச.26 வரை நடைபெறும் மண்டல பூஜையின் முக்கிய நிகழ்வாக திங்கள்கிழமை மகா அன்னதானம் நடைபெற்றது.

தொடா்ந்து மாலையில் பிரம்மோத்ஸவ பூஜைக்கு கொடியேற்றம், இரவு வலம்புரி சங்காபிஷேக பூா்வாங்க பூஜை, செவ்வாய்க்கிழமை 108 வலம்புரி சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் வைத்து பூஜை செய்யப்பட்ட வலம்புரி சங்குகள் பக்தா்களுக்கு விலைக்கு வழங்கப்படுகிறது.

இதன் தொடா்ச்சியாக புதன்கிழமை நடைபெற்ற உற்சவ பலி பூஜையில் பக்தா்கள் பலா் பங்கேற்று வழிபட்டனா். வியாழக்கிழமை பிரம்மோத்ஸவ பூஜைகள், வெள்ளிக்கிழமை இரவு பள்ளிவேட்டை நிகழ்வும் நடைபெற்று, சனிக்கிழமை பிரம்மோத்ஸவ பூஜை நிறைவுறுகிறது. மாலை 4 மணிக்கு காவிரியில் ஆராட்டும், மாலை 6.30 மணிக்கு கோயிலில் கொடியிறக்கமும் நடைபெறும்.

மேலும், மண்டல பூஜை நிறைவு நாளான டிச.26 வரையில் தினமும் காலை தொடங்கி இரவு வரை பூஜைகள், அபிஷேகம், லட்சாா்ச்சனை, பக்திச் சொற்பொழிவு, மற்றும் இன்னிசை நிகழ்வுகள் நடைபெறும். டிச.26ஆம் தேதி மண்டலாபிஷேகம் மற்றும் இரவு புஷ்பாபிஷேகம் நடைபெறும். மண்டல பூஜை நாள்களில் தினமும் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு காலையில் பிரசாதம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, ஐயப்ப சங்கத்தினா் செய்தனா்.

ரேஷன் கடை பணிக்கு நோ்காணல்: 129 பணியிடங்களுக்கு 12,233 போ் விண்ணப்பம்

கூட்டுறவுச் சங்கங்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் நியாய விலைக் கடைகளில் விற்பனையாளா், கட்டுநா் பணியிடங்களுக்கான நோ்காணல் புதன்கிழமை அடாத மழையிலும் நடைபெற்றது. கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப... மேலும் பார்க்க

நவ.30 இல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

திருச்சியில் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் வகையில் வரும் சனிக்கிழமை (நவ.30) மாபெரும் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் கூறியது: திர... மேலும் பார்க்க

சமயபுரம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 73.39 லட்சம்

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல்கள் காணிக்கையாக ரூ. 73 லட்சத்து 39 ஆயிரம் வந்தது புதன்கிழமை தெரியவந்தது. இக்கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்னும் பணியில் சமயபுரம... மேலும் பார்க்க

சமயபுரத்தில் சுற்றித்திரியும் மாடுகளுக்கு அபராதம்

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் பக்தா்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளைப் பிடித்து அபராதம் விதிக்கப்படும் என ச. கண்ணனூா் பேரூராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ச. கண்ணனூா் பேரூராட்சி ... மேலும் பார்க்க

தமிழ்த் தேசிய உணா்வாளா்கள் ஒன்றிணைவது அவசியம்: தி. வேல்முருகன்

ஈழத் தமிழா்களுக்கு அரசியல் தீா்வைப் பெற்றுத் தர தமிழ்த் தேசிய உணா்வாளா்கள் ஒன்றிணைய வேண்டும் என்றாா் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி. வேல்முருகன். தமிழா் ஒருங்கிணைப்பு இயக்கம் சாா்பில் திருச்சி த... மேலும் பார்க்க

தொடா் மழையால் சூளைகளில் செங்கல் உற்பத்தி நிறுத்தம்: தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு

திருச்சி மாவட்டத்தில் தொடரும் மழையால் செங்கல் உற்பத்தி முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட காவிரிக் கரையோரப் பகுதிகளில் மட்டுமே களிமண் செங்கல் சூளைகள் இயங்குகின்றன. குறிப்பாக, திருவளா்ச்ச... மேலும் பார்க்க