தில்லியில் பிரசாரம் நிறைவு! மும்முனைப் போட்டியில் வெல்வது யார்?
ஐயாறப்பர் கோயிலில் குடமுழுக்கு விழா!
பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஐயாறப்பர் ஆலயத்தில் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி சமேத ஐயாறப்பர் ஆலயம் அமைந்துள்ளது. தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான இந்த கோயில் பெரிய கோயில் கட்டுவதற்கு முன்பு சுமார் 2000 ஆண்டுகள் பழமையானது. அப்பருக்கு கயிலை காட்சி அளித்த இக்கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
விழாவினையொட்டி கடந்த 29ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தினமும் காலை மாலை என யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இன்று எட்டாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று கடம் புறப்பாடு நடைபெற்றது. அதனை தொடர்ந்து விமான கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்றது.
இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.