செய்திகள் :

புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி ஊர்வலம்!

post image

தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பிப்.10ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதையடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாகக் கோயிலுக்கு வந்தனர்.

தஞ்சாவூரை அடுத்துள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆலயத்தில் அம்மன் புற்றாக உருவெடுத்து அருள்பாலித்து வருகிறார். இதன் காரணமாக மூலவரான அம்மனுக்கு எந்தவிதமான அபிஷேகமும் செய்யப்படுவதில்லை. இத்தகைய சிறப்புமிக்க இந்த ஆலயத்திற்கு தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

இந்த நிலையில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கோயில் திருப்பணிகள் நிறைவு பெற்று 20 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிற 10ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இன்று கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேகத்திற்கான பூஜைகள் துவங்கியது.

இதனையொட்டி, உறுமி மேளம், கொம்பு இசை, தப்பாட்டம், கோலாட்டம், காளியாட்டத்துடன் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முளைபாரி எடுத்து ஊர்வலமாக கிராமத்தை வலம் வந்து கோயிலை வந்தடைந்தனர். 7ம் தேதி மாலை கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை துவங்குகிறது.

மீண்டும் ஒரே மேடையில் சந்தித்துக்கொண்ட பிக் பாஸ் பிரபலங்கள்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் மீண்டும் ஒரே மேடையில் சந்தித்துக்கொண்டனர். பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் போட்டியாளர்களுக்காக பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிரு... மேலும் பார்க்க

மெளனம் பேசியதே தொடரிலிருந்து விலகிய லிவிங்ஸ்டன் மகள்!

நடிகர் லிவிங்ஸ்டன் மகளும் சின்னதிரை நடிகையுமான ஜோவிதா லிவிங்ஸ்டன், மெளனம் பேசியதே தொடரில் இருந்து விலகியுள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மெளனம் பேசியதே தொடரில் நடித்துவந்த அவர், தற்போது அத... மேலும் பார்க்க

ஐயாறப்பர் கோயிலில் குடமுழுக்கு விழா!

பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஐயாறப்பர் ஆலயத்தில் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் ஸ்ரீ... மேலும் பார்க்க

இன்று யோகம் யாருக்கு!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.03-02-2025திங்கட்கிழமைமேஷம்:இன்று பயணங்களால் நல்ல அனுகூலங்கள் ஏற்படும். கொடுத்த வாக்க... மேலும் பார்க்க

சென்னை ஓபன் டென்னிஸ்: இன்றுமுதல் பிரதான சுற்று

சா்வதேச ஆடவா் டென்னிஸ் போட்டியான சென்னை ஓபனில் பிரதான சுற்று, திங்கள்கிழமை (பிப். 3) தொடங்குகிறது. 100 புள்ளிகளைக் கொண்ட ஏடிபி சேலஞ்சா் போட்டியான இது, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் ... மேலும் பார்க்க

தேசிய விளையாட்டுப் போட்டிகள்: கூடைப்பந்து, ஸ்குவாஷ், நீச்சல் பளுதூக்குதலில் தமிழகத்துக்கு தங்கம்

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிா் கூடைப்பந்து, ஆடவா் ஸ்குவாஷ், நீச்சலில், பளு தூக்குதலில் ல் தமிழகம் தங்கப் பதக்கம் வென்றது. உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் 38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நட... மேலும் பார்க்க