செய்திகள் :

ஐ.மு.கூட்டணி ஆட்சியில்தான் அதிக மசோதாக்கள் நிலைக் குழுக்களுக்கு பரிந்துரைக்கப்பட்டன: மாநிலங்களவையில் திமுக எம்.பி. பேச்சு

post image

நமது நிருபர்

மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி (ஐமுகூ) ஆட்யில்தான் அதிக சதவீத மசோதாக்கள் நிலைக் குழுக்களுக்கு பரிந்துரைக்கப்பட்டன என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் பி.வில்சன் தெரிவித்தார்.

இந்திய அரசமைப்புச்சட்டம் ஏற்கப்பட்டதன் 75-ஆவது ஆண்டு நிறைவையொட்டி மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதத்தில் திமுக உறுப்பினர் பி.வில்சன் பேசியதாவது:

17-ஆவது மக்களவையில் 221-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், இவற்றில் மூன்றில் ஒரு பங்கு மசோதாக்கள் ஒரு மணி நேரத்துக்கும் குறைவான விவாதத்தில் அல்லது விவாதம் இல்லாமல் நிறைவேற்றப்பட்டுள்ளன. மணிப்பூரில் மிக மோசமான இனப்படுகொலைகள் பற்றி எந்த விவாதமும் நடைபெறவில்லை. நிலைக்குழுக்கள் காகிதக் குழுக்களாகக் குறைக்கப்பட்டுள்ளன.

17-ஆவது மக்களவையில், 16 சதவீதம் மசோதாக்கள் மட்டுமே விரிவான ஆய்வுக்காக நிலைக் குழுக்களுக்கு அனுப்பப்பட்டன. மாறாக, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) ஆட்சியின் போது, 71 சதவீதம் மசோதாக்கள் நிலைக் குழுக்களுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தன என்றார் பி.வில்சன்.

அம்பேத்கரை அவமதித்த அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்! ராகுல்காந்தி பதிலடி!

அம்பேத்கரை அவமதித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.மக்களவையில் செவ்வாய்க்கிழமை அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு... மேலும் பார்க்க

பாகிஸ்தானிலிருந்து 22 ஆண்டுகள் கழித்து தாயகம் திரும்பிய இந்திய பெண்! யூடியூப் விடியோவால் மீட்கப்பட்டார்

துபையில் வேலை வாங்கித் தருவதாக முகவர் ஒருவரால் ஏமாற்றப்பட்டு பாகிஸ்தானில் இறக்கிவிடப்பட்ட இந்திய பெண் ஹமிதா பானு, 22 ஆண்டுகள் கழித்து தாயகம் திரும்பியுள்ளார்.பாகிஸ்தானிலிருந்து வெளியான அவரது யூடியூப் ... மேலும் பார்க்க

அதிக பெண் மருத்துவர்கள்: இந்தியா வளர்ந்த சமூகமாகிறது- குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

மருத்துவத் துறையில் அதிக அளவிலான பெண்கள் ஈடுபட்டு வருவதும் அவர்களது குறிப்பிடத்தக்க சேவையும் இந்தியா வளர்ந்த சமூகமாக உருவெடுத்து வருவதை நிரூபிக்கிறது என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார... மேலும் பார்க்க

கணினி சார்ந்த தேர்வு மையங்கள் அமைக்க மாநிலங்களின் ஆதரவு தேவை: மத்திய அரசு

நமது நிருபர்உயர்கல்வி நிறுவனங்களில் நுழைவதற்கான தேர்வுகளை நடத்துவதற்காக கணினி சார்ந்த தேர்வு மையங்களை அமைக்க மாநில அரசுகள் ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தகவல் த... மேலும் பார்க்க

ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: மாநிலங்களவையில் அன்புமணி வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபர்இடஒதுக்கீட்டில் 50 சதவீதம் உச்சவரம்பை நீக்க வேண்டும், ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இந்திய... மேலும் பார்க்க

இரட்டை இலை சின்னம் விவகாரம்: புகழேந்தியின் மனுவுக்கு தேர்தல் ஆணையம் தீர்வு காண தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

நமது நிருபர்அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதற்கு எதிராக அந்தக் கட்சியின் முன்னாள் நிர்வாகி புகழேந்தி அளித்த மனுவை விரைந்து விசாரித்து தீர்வு காணுமாறு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தில்லி உயர்நீ... மேலும் பார்க்க