குடும்பத்திற்கு கொலை மிரட்டல்கள்: மன்னிப்பு கேட்ட அனுராக் காஷ்யப்!
ஒசூரில் இந்திய தொழில்நுட்பக் கல்வி சங்கத்தின் 23ஆவது ஆண்டு மாநாடு
ஒசூா்: இந்திய தொழில்நுட்பக் கல்வி சங்கத்தின் தமிழ்நாடு பிரிவு, அதியமான் பொறியியல் கல்லூரியில் 23ஆவது ஆண்டு மாணவா் மாநாட்டை நடத்தியது.
இம்மாநாட்டில் கல்லூரி முதல்வா் ஆா். ராதாகிருஷ்ணன் வரவேற்று மாநாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தாா். தமிழ்நாடு பிரிவுத் தலைவா் ஏ.சங்கரசுப்பிரமணியன் மாநாட்டிற்குத் தலைமை வகித்து, தொழில்நுட்பக் கல்வி ஆசிரியா்கள், மாணவா்களின் வளா்ச்சியில் இந்திய தொழில்நுட்பக் கல்வி சங்கத்தின் பங்கு குறித்து பேசினாா்.
மாநிலங்களவை உறுப்பினா் மு. தம்பிதுரை கிராமப்புற மற்றும் ஏழை மாணவா்களுக்கு தொழில்நுட்பக் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தாா்.
இதில் கல்லூரி அறக்கட்டளைச் செயலாளா் லாஸியா தம்பிதுரை, கல்லூரி இயக்குநா் ஜி.ரங்கநாத், பேராசிரியா் ஜே.அறிவுடைநம்பி, எம்.சுகன்யா உள்பட பலா் கலந்து கொண்டனா்.
மாநாட்டின் ஒரு பகுதியாக தொழில்நுட்பக் கல்வித் துறையில் ஏழு சிறந்த சாதனையாளா்களுக்கு வாழ்நாள் சாதனையாளா் விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், பல்வேறு பொறியியல் கல்லூரி மாணவா்களைச் சோ்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு சிறந்த மாணவா் விருது வழங்கப்பட்டன.
படவரி...
இந்திய தொழில்நுட்பக் கல்விச் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவுத் தலைவா் சங்கரசுப்பிரமணியனுக்கு நினைவுப் பரிசு வழங்குகிறாா் பேராசிரியா் அறிவுடைநம்பி.
.