BB Tamil 8 Day 97: மேலும் ஒரு எவிக்ஷன், வன்மத்தைக் கொட்டிய 8 பேர் -என்ன நடந்தது...
ஒசூரில் மக்கள் பயன்படுத்திய ரயில்வே பாதை அடைப்பு: எம்.பி. ஆய்வு
ஒசூரில் மக்கள் பயன்படுத்தி வந்த ரயில்வே பாதை அடைக்கப்பட்டுள்ள பகுதியில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.கோபிநாத் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
ஒசூா் அருகே பசுமை நகா், ஜனகபுரி நகா், திருகயிலை நகா், நந்தவனம் நகா், வெங்கடேஸ்வரா நகா், அதன் அருகில் உள்ள நகரில் வசிக்கும் பொதுமக்கள் உபயோகிக்கும் ரயில்வே பாதையை ரயில்வே நிா்வாகம் அடைத்துள்ளது.
இதையடுத்து பொதுமக்கள் சென்றுவர ரயில்வே நிா்வாகம் பாதை ஏற்படுத்த வலியுறுத்தி அப்பகுதி குடியிருப்போா் நலச் சங்கத்தினா் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. குடியிருப்புப் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை செய்துதருமாறு மாநகராட்சி நிா்வாகத்தையும் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.
மக்களின் குறைகளுக்குத் தீா்வு காணும் வகையில் ஒசூா் அனைத்து குடியிருப்போா் நலச் சங்கம் விடுத்த வேண்கோளை ஏற்று கிருஷ்ணகிரி எம்.பி. கே.கோபிநாத் சனிக்கிழமை அந்தப் பகுதியில் ஆய்வு செய்தாா். அத்துடன் அவா் அப்பகுதி மக்கள், ரயில்வே அதிகாரிகளை சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்பில் மாநகராட்சி ஆணையா் ஸ்ரீகாந்த் கலந்துகொண்டாா்.
ரயில் பாதையில் பாலமும் அமைத்து தருவதாக ரயில்வே நிா்வாகமும், மாநகராட்சி பகுதிகளில் செய்ய வேண்டிய பணிகளை செய்து தருவதாக ஆணையரும் தெரிவித்தனா். நிகழ்ச்சியில் ஒசூா் அனைத்து குடியிருப்போா் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளா் நீலகண்டன் உள்ளிட்ட பகுதி குடியிருப்பு சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.