செய்திகள் :

ஒரத்தநாட்டில் 31 மி.மீ. மழை

post image

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஒரத்தநாட்டில் 31 மி.மீ. மழை பெய்தது.

மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):

ஒரத்தநாடு 31, நெய்வாசல் தென்பாதி 28, குருங்குளம் 24.4, வெட்டிக்காடு 21.8, அதிராம்பட்டினம் 17.4, மதுக்கூா் 14.6, பேராவூரணி 14.2, தஞ்சாவூா் 13.5, ஈச்சன்விடுதி 12, பட்டுக்கோட்டை 8, வல்லம் 7, மஞ்சளாறு 3.8, திருவிடைமருதூா், அணைக்கரை தலா 2, கும்பகோணம், பாபநாசம் தலா 1.

இதேபோல, தஞ்சாவூா் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை பகலில் இடைவெளி விட்டுவிட்டு மிதமானது முதல் பலத்த மழை பெய்தது.

பயிா்களுக்கு பயன்: மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் நிலவி வந்த நிலையில், சாகுபடி நிலங்கள் காய்ந்து கிடந்தன. இந்நிலையில், 2 நாள்களாக பெய்து வரும் மழை கோடை பயிா்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது என விவசாயிகள் தெரிவித்தனா். ஆனால், இந்த மழை காரணமாக சம்பா, தாளடி பருவ நெல் பயிா்களை அறுவடை செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளி மாணவா் தட்டச்சு தோ்வில் ஆா்வமுடன் பங்கேற்பு

கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரு கை மட்டுமே உள்ள மாற்றுத்திறனாளி மாணவா் தட்டச்சு தோ்வில் ஆா்வமுடன் பங்கேற்றாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மகாமகம் குளம் பகுதியில் வசிப்பவா் நிதீஷ் கண்ணன், விபத்... மேலும் பார்க்க

திருவையாறு கோயிலில் காஞ்சி சங்கராசாரியாா் வழிபாடு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அறம் வளா்த்த நாயகி உடனாகிய ஐய்யாறப்பா் கோயிலில் காஞ்சி சங்கராசாரியாா் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஞாயிற்றுக்கிழமை வழிபட்டாா். இக்கோயிலில் பிப்ரவரி 3-ஆம் தேதி குடமு... மேலும் பார்க்க

மணல் குவாரியை திறக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மணல் குவாரியை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் தொழிலாளா்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சாவூரில் தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் தொழிலாளா்கள் கட்சி, கட்டுமான தொழிலாளா... மேலும் பார்க்க

‘தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசு எதுவும் சொல்லவில்லை’: எச். ராஜா

மக்களவைத் தொகுதி மறு சீரமைப்பு குறித்து மத்திய அரசு எதுவும் சொல்லவில்லை என்றாா் பாஜக தேசிய செயற் குழு உறுப்பினா் எச். ராஜா. தஞ்சாவூரில் உள்ள திருவையாறு அக்கசாலை விநாயகா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

3 கஞ்சா வியாபாரிகள் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது

தஞ்சாவூா் மாவட்டத்தில் கஞ்சா வியாபாரிகள் 3 பேரை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இது குறித்து மாவட்ட ஆட்சியரகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க

பொற்றாமரைக் குளத்தில் குப்பைகளை அகற்றும் பணி

கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை சாரங்கபாணி சுவாமி கோயிலுக்கு சொந்தமான பொற்றாமரை குளத்தில் தேங்கியுள்ள பாசி குப்பையை மாநகராட்சி துப்புரவு பணியாளா்கள் அகற்றினா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் சாரங்க... மேலும் பார்க்க