செய்திகள் :

ஒருவர் சதம், மூவர் அரைசதம் விளாசல்; அயர்லாந்துக்கு 371 ரன்கள் இலக்கு!

post image

அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 370 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ராஜ்காட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பேட்டிங்கைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடியது.

இதையும் படிக்க:இங்கிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; முகமது ஷமி அணியில் சேர்ப்பு!

சதம் விளாசிய ஜெமிமா ரோட்ரிக்ஸ்

இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதீகா ராவல் களமிறங்கினர். இந்த இணை இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். இந்திய அணி முதல் விக்கெட்டுக்கு 156 ரன்கள் சேர்த்தது. கேப்டன் ஸ்மிருதி மந்தனா 54 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, பிரதீகா ராவல் 61 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

இதனையடுத்து, ஹர்லீன் தியோல் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி சேர்ந்தனர். தொடக்க வீராங்கனைகள் அதிரடியாக விளையாடியது போன்று இந்த இணையும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய ஹர்லீன் தியோல் அரைசதம் கடந்தார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஒருநாள் போட்டிகளில் அவரது முதல் சதத்தை பதிவு செய்தார். ஹர்லீன் தியோல் 84 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 12 பவுண்டரிகள் அடங்கும். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 91 பந்துகளில் 102 ரன்கள் எடுத்தார். அதில் 12 பவுண்டரிகள் அடங்கும்.

இதையும் படிக்க: ரோஹித் சர்மா, விராட் கோலிக்கு ஆதரவாக பேசிய ஜாண்டி ரோட்ஸ்!

இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 370 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து தரப்பில் ஓர்லா பிரண்டர்கேஸ்ட் மற்றும் அர்லீன் கெல்லி தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஜியார்ஜினா டெம்ப்ஸி ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி அயர்லாந்து அணி விளையாடி வருகிறது.

சாம்பியன்ஸ் டிராபிக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!

சாம்பியன்ஸ் டிராபிக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜனவரி 12) அறிவித்துள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி க... மேலும் பார்க்க

ஐபிஎல் தொடரில் அறிமுகமாகும் ஐசிசி நடத்தை விதிமுறைகள்!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஐசிசி நடத்தை விதிமுறைகள் அறிமுகமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 21 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஐபிஎல் தொடருக்கான மெகா ... மேலும் பார்க்க

பிசிசிஐ செயலர், பொருளாளர் போட்டியின்றித் தேர்வு!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலர், பொருளாளர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.பிசிசிஐ செயலராக செயல்பட்டு வந்த ஜெய் ஷா, கடந்த ஆண்டின் இறுதியில் ஐசிசியின் தலைவராக பொறுப்பேற்றுக... மேலும் பார்க்க

100-வது ஒருநாள் போட்டியில் அசத்திய தீப்தி சர்மா!

இந்திய வீராங்கனை தீப்தி சர்மா அவரது 100-வது ஒருநாள் போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார்.இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ராஜ்காட்டில் இன்று (ஜனவரி ... மேலும் பார்க்க

ஒருநாள், டெஸ்ட் அணி கேப்டனாக ரோகித் சர்மா நீடிப்பார்: பிசிசிஐ!

ஒருநாள், டெஸ்ட் அணி கேப்டனாக ரோகித் சர்மா நீடிப்பார் என்று பிசிசிஐ ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பார்டர் - கவாஸ்கர் தொடரில் மோசமான தோல்வியைத் தழுவிய இந... மேலும் பார்க்க

தோனியின் துணிச்சல் யாருக்கும் இல்லை! -யுவராஜ் சிங்கின் தந்தை சுவாரசியம்

இந்திய கிரிக்கெட் அணியில் ஆல் ரவுண்டராக ஜொலித்த ‘யுவராஜ் சிங்கின்’ தந்தை யோக்ராஜ் சிங், மகேந்திர சிங் தோனியை வெகுவாகப் பாராட்டி பேசியுள்ளார். எம். எஸ். தோனி மீது யுவராஜின் தந்தை அதிருப்தியில் இருப்பதெ... மேலும் பார்க்க