செய்திகள் :

ஒரே ஓவரில் இரண்டு கைகளில் பந்துவீசிய கமிந்து மெண்டிஸ்! விக்கெட்டும் வீழ்த்தினார்!

post image

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஆல்-ரவுண்டர் கமிந்து மெண்டிஸ் இரண்டு கைகளில் பந்துவீசியது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பேட்டிங் செய்து 200 ரன்கள் குவித்தது.

அடுத்து விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 16.4 ஓவர்களில் 120 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதில் இலங்கையைச் சேர்ந்த கமிந்து மெண்டிஸ் சன்ரைசர்ஸ் அணிக்காக நேற்றைய (ஏப்.3) போட்டியில் களமிறங்கினார்.

இந்தப் போட்டியில் 13ஆவது ஓவரில் முதல் பந்தினை வலது கையிலும் அதே ஓவரில் 3ஆவது பந்தினை இடது கையிலும் பந்துவீசுவார்.

இதில் இடது கையால் வீசிய பந்தில் அரைசதம் அடித்த ரகுவன்ஷி ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

பேட்டிங்கிலும் அசத்திய கமிந்து மெண்டிஸ் தற்போது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளார்.

சிறப்பான டெஸ்ட் பேட்டரான இவர் டி20 போட்டிகளில் களமிறங்கியிருப்பது இலங்கை ரசிகர்களுக்கும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

விராட் கோலியிடம் கற்றுக்கொள்ள வேண்டியது... மனம் திறந்த இளம் ஆர்சிபி வீரர்!

விராட் கோலியிடமிருந்து இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது குறித்து தேவ்தத் படிக்கல் கூறியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆர்சிபியின் இளம் வீரர் தேவ்தத் படிக்கல் ஐபிஎல் தொடரில் தனது சவாலான பயணம் குறித... மேலும் பார்க்க

சென்னை பந்துவீச்சை சிதறடித்த பிரியான்ஷ் ஆர்யா 39 பந்தில் அதிரடி சதம்..! 220 ரன்கள் இலக்கு!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி ரன்கள் குவித்துள்ளது. இதனால், சென்னை அணிக்கு 220 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.சண்டீகரில் நடைபெறும் சென்னை - பஞ்சாப் அணிகள் மோதும் ஐ... மேலும் பார்க்க

புவனேஷ்வர் குமாரை முந்திய அஸ்வின்!

ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் புவனேஷ்வர் குமாரை முந்தினார் ஆர். அஸ்வின். தமிழகத்தைச் சேர்ந்த ஆர். அஸ்வின் மீண்டும் சிஎஸ்கே அணிக்காக இந்த ஐபிஎல் 2025-இல் இருந்து விளையாட... மேலும் பார்க்க

கடின உழைப்புக்கு பலன்: தேவ்தத் படிக்கல்

ஆர்சிபியின் இளம் வீரர் தேவ்தத் படிக்கல் ஐபிஎல் தொடரில் தனது சவாலான பயணம் குறித்து பேட்டியளித்துள்ளார். நேற்றிரவு (ஏப்.7) வான்கடே திடலில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் ஆர்சிபி மோதியது. இந்தப் போட்டியில் 1... மேலும் பார்க்க

பரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி லக்னௌ த்ரில் வெற்றி!

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான பரபரப்பான போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் கொல்கத்தா நைட் ர... மேலும் பார்க்க

வெற்றிப் பாதைக்கு திரும்ப போவது யார்? டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு!

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. சென்னை - பஞ்சாப் அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் 22-வது போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ... மேலும் பார்க்க