செய்திகள் :

"ஒரே நாடு ஒரே தேர்தல்': கூட்டுக் குழு அமைப்பு; மக்களவையில் இன்று தீர்மானம்

post image

"ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாக்களை ஆய்வு செய்ய 31 எம்.பிக்கள் அடங்கிய நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான தீர்மானம் மக்களவையில் வியாழக்கிழமை (டிச. 19) கொண்டு வரப்படுகிறது.

மக்களவை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நடைமுறையை அமல்படுத்த மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கென 2 மசோதாக்களை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய முடிவு செய்து, அதற்கு அண்மையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

2 மசோதாக்கள்: மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளின் பதவிக் காலத்தை ஒரே நேரத்தில் நிறைவு செய்வது தொடர்பாக அரசமைப்பு சட்டப் பிரிவு 82ஏ-இல் புதிதாக துணைப் பிரிவு (2)-ஐ சேர்க்கவும், மக்களவை, சட்டப்பேரவைகளை கலைப்பது தொடர்பாக சட்டப் பிரிவு 83(2)-இல் புதிதாக துணைப் பிரிவுகள் (3), (4)-ஐ சேர்க்கவும், ஒரே நேரத்தில் இரு தேர்தல்களையும் நடத்துவது தொடர்பாக சட்டப் பிரிவு 327-இல் திருத்தம் மேற்கொள்ளவும் இந்த முதல் மசோதா வழிவகை செய்கிறது.

இரண்டாவது மசோதாவைப் பொருத்தவரை, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு ஏதுவாக புதுச்சேரி, தில்லி, ஜம்மு-காஷ்மீர் ஆகிய யூனியன் பிரதேசங்களுடன் தொடர்புடைய 3 சட்டங்களில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பானதாகும்.

அறிமுகம்: இந்த இரு மசோதாக்களை மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் செவ்வாய்க்கிழமை மக்களவையில் அறிமுகம் செய்தார். மசோதாக்களைத் தாக்கல் செய்ய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். எனினும், மசோதாக்களுக்கு பாஜக கூட்டணிக் கட்சிகளான தெலுங்கு தேசம், ஷிண்டே சிவசேனை ஆகியவை ஆதரவு தெரிவித்தன.

விவாதத்துக்குப் பின் தாக்கல்: மக்களவையில் சுமார் 90 நிமிஷங்கள் நீடித்த விவாதத்துக்குப் பின்னர், மசோதாக்களைத் தாக்கல் செய்வது தொடர்பாக முடிவு செய்வதற்காக மின்னணு முறையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. மசோதாவைத் தாக்கல் செய்வதற்கு ஆதரவாக 269 எம்.பி.க்களும், எதிராக 198 எம்.பி.க்களும் வாக்களித்தனர். இதையடுத்து, பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில், இரு மசோதாக்களையும் சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார்.

அப்போது, மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பேசுகையில், ""ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவுக்கு எழுந்துள்ள ஆட்சேபங்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. இந்தச் சட்டத் திருத்தம் மாநிலங்களுக்கு உள்ள அதிகாரங்களில் குறுக்கிடாது' என்றார்.

மேலும், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையின்படி, இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்ப அவையில் தீர்மானம் கொண்டுவர உள்ளதாகவும் அவர் கூறினார்.

31 பேர் அடங்கிய குழு: இந்நிலையில், "ஒரே நாடு ஒரே' தேர்தலுக்கான இரு மசோதாக்களை பரிசீலிக்க 31 எம்.பிக்கள் அடங்கிய நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைப்பதற்கான தீர்மானத்தை மக்களவையில் அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் வியாழக்கிழமை கொண்டு வருகிறார். வியாழக்கிழமைக்கான திருத்தப்பட்ட மக்களவை அலுவல் நிரலில் இத்தகவல் உறுதிப்படுத்தப்பட்டது.

அதன்படி, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா கூட்டுக் குழுவில் 21 மக்களவை எம்.பி.க்கள், 10 மாநிலங்களவை எம்.பி.க்கள் என தலைவர் உள்பட 31 எம்.பி.க்கள் இடம்பெறுகின்றனர்.

10 பாஜக எம்.பி.க்கள்: கூட்டுக் குழுவில் இடம்பெறும் 21 மக்களவை எம்.பி.க்களின் விவரங்கள் வெளியாகியுள்ளன. மக்களவையில் பெரிய கட்சியான பாஜக எம்.பி.க்கள் குழுவில் அதிகமாக (10 பேர்) இடம்பெற்றுள்ளனர். பாஜக சார்பில் பி.பி.செüதரி, சி.எம்.ரமேஷ், அனுராக் தாக்கூர் ஆகியோரும், பாஜக கூட்டணிக் கட்சிகளான சிவசேனை சார்பில் முன்னாள் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே, தெலுங்கு தேசம் சார்பில் ஹரீஷ் பாலயோகி ஆகியோரும் கூட்டுக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

காங்கிரஸ் சார்பில் பிரியங்கா: காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி, மணீஷ் திவாரி, சுக்தியோ பகத் உள்ளிட்ட மூவரும், தர்மேந்திர யாதவ் (சமாஜவாதி), டி.எம்.செல்வகணபதி (திமுக), கல்யாண் பானர்ஜி (திரிணமூல்), சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ்-பவார்) ஆகிய எதிர்க்கட்சி எம்.பி.க்களும் கூட்டுக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

கூட்டுக் குழுவில் கட்சி சார்பில் இடம்பெற வேண்டிய எம்.பி.க்களின் பெயர்களை அந்தந்த கட்சிகள் மத்திய அரசிடம் பரிந்துரைத்தன. அதன் அடிப்படையில் குழுவில் இடம்பெறும் மக்களவை எம்.பி.க்களை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா இறுதி செய்தார்.

கூட்டுக் குழுவில் இடம்பெறும் மாநிலங்களவை எம்.பி.க்களின் பட்டியலை மாநிலங்களவைத் தலைவர் தெரிவிக்க வேண்டும்.

பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிக்கை தாக்கல்: கூட்டுக் குழுவில் நியமிக்கப்படும் மாநிலங்களவை உறுப்பினர்களின் பெயர்களை மக்களவைக்கு தெரிவிக்க மாநிலங்களவைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தக் குழு தனது அறிக்கையை அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் (பட்ஜெட் கூட்டத் தொடர்) கடைசி வாரத்தில் தாக்கல் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமித் ஷாவின் பேச்சை திரித்துப் பேசும் காங்கிரஸ் தலைவர்கள்: எல். முருகன் கண்டனம்

நமது சிறப்பு நிருபர்அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் பேசியதை காங்கிரஸ் தலைவர்கள் திரித்து கூறுவதாக நாடாளுமன்ற விவகாரங்கள், தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல். முருகன் க... மேலும் பார்க்க

செமிகண்டக்டர் உற்பத்தி அலகுகளை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும்: கனிமொழி எம்.பி. கோரிக்கை

நமது நிருபர்செமிகண்டக்டர் உற்பத்தி அலகுகளை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும் என்று மக்களவையில் நாடாளுமன்றத் திமுக குழுத் தலைவரும் தூத்துக்குடி தொகுதி எம்.பி.யுமான கனிமொழி வலியுறுத்தினார்.இது தொடர்பாக மக்க... மேலும் பார்க்க

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு: 9 பேருக்கு உச்சநீதிமன்றம் பிடியாணை

நமது நிருபர்மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 9 பேரை கைது செய்து ஆஜர்படுத்தக் கோரி பிடியாணை பிறப்பித்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு கு... மேலும் பார்க்க

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை ஜனநாயக சக்திகள் எதிர்க்க வேண்டும்: துரை வைகோ வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபர்"ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும் என்று மதிமுக முதன்மைச் செயலரும் அக்கட்சியின் திருச்சி தொகுதி மக்களவை உறுப்பினருமான துரை வை... மேலும் பார்க்க

6.69 லட்சம் சிம் காா்டுகள் முடக்கம்- மத்திய அரசு தகவல்

இணைய (சைபா்) குற்றங்களைத் தடுக்க நிகழாண்டில் கடந்த நவம்பா் 15-ஆம் தேதிவரை 6.69 லட்சத்துக்கும் அதிகமான சிம் காா்டுகளையும், 1,32,000 ஐஎம்இஐ எண்களையும் முடக்கியுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல் அ... மேலும் பார்க்க

போராட்டத்தில் தடியடி: 2 காங்கிரஸ் தொண்டா்கள் உயிரிழப்புக்கு ராகுல் கண்டனம்

அஸ்ஸாம், உத்தர பிரதேசத்தில் புதன்கிழமை நடைபெற்ற போராட்டங்களில் போலீஸாா் தடியடி நடத்தியதாலும், கண்ணீா் புகைக்குண்டுகளை வீசியதாலும் தொண்டா்கள் இருவா் உயிரிழந்ததாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இதற்கு அக்... மேலும் பார்க்க