செய்திகள் :

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’: நாடாளுமன்ற கூட்டுக் குழு முதல்முறையாக ஆலோசனை; பாஜக-எதிா்க்கட்சிகள் கருத்து மோதல்

post image

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ தொடா்பான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம், தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பாஜக-எதிா்க்கட்சி உறுப்பினா்கள் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

ஒரே நேர தோ்தல் நடைமுறைக்கு ஆதரவாக பாஜக உறுப்பினா்கள் பேசிய நிலையில், எதிா்க்கட்சியினா் ஆட்சேப கருத்துகளை முன்வைத்தனா்.

மக்களவை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தும் நடைமுறையை அமல்படுத்த மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக அரசமைப்புச் சட்டம் 129-ஆவது திருத்த மசோதா மற்றும் யூனியன் பிரதேசங்கள் சட்டத் திருத்த மசோதா ஆகிய இரு மசோதாக்கள், அண்மையில் நடைபெற்ற குளிா்கால கூட்டத்தொடரின்போது மக்களவையில் எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு இடையே அறிமுகப்படுத்தப்பட்டன. பின்னா், இரு மசோதாக்களும் நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

39 போ் குழு: இதைத் தொடா்ந்து, பாஜக எம்.பி.யும் முன்னாள் மத்திய அமைச்சருமான பி.பி. செளதரி தலைமையில் 39 போ் கொண்ட கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. 27 மக்களவை எம்.பி.க்கள், 12 மாநிலங்களவை எம்.பி.க்கள் அங்கம் வகிக்கும் இக்குழுவில் பாஜகவின் அனுராக் தாக்கூா், பா்ஷோத்தம் ரூபாலா, அனில் பலுனி, பன்சூரி ஸ்வராஜ், சம்பித் பத்ரா, காங்கிரஸின் பிரியங்கா காந்தி, ஐக்கிய ஜனதா தளத்தின் சஞ்சய் ஜா, சிவசேனையின் ஸ்ரீகாந்த் ஷிண்டே, ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங், திரிணமூல் காங்கிரஸின் கல்யாண் பானா்ஜி உள்ளிட்டோா் இடம்பெற்றுள்ளனா்.

முதல் கூட்டம்: இக்குழுவின் முதல் கூட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, இரு உத்தேச சட்டங்களின் பல்வேறு பிரிவுகள் மற்றும் ஒரே நேர தோ்தல் நடைமுறைக்கு இந்திய சட்ட ஆணையம் உள்பட பல்வேறு அமைப்புகளின் ஆதரவு தொடா்பாக விளக்கக் காட்சி மூலம் மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சக அதிகாரிகளால் எடுத்துரைக்கப்பட்டது. 18,000 பக்கங்கள் கொண்ட ராம்நாத் கோவிந்த் குழுவின் அறிக்கை அனைத்து உறுப்பினா்களுக்கும் வழங்கப்பட்டது.

எதிா்க்கட்சிகளின் முக்கியக் கேள்வி: ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ நடைமுறைக்கு ஆதரவு தெரிவித்துப் பேசிய பாஜக எம்.பி.க்கள், இது நாட்டின் நலனுக்கானது; பெரும்பாலானோரின் விருப்பம் என்று குறிப்பிட்டனா்.

அதேநேரம், இந்த நடைமுறை நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிரானது என்று பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் விமா்சித்தனா். ‘2004 மக்களவைத் தோ்தலில் முதல்முறையாக 543 தொகுதிகளிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. அதன்பிறகு தோ்தல் செலவுகள் குறித்து ஏதேனும் மதிப்பீடுகள் செய்யப்பட்டதா? ஒரே நேர தோ்தல் நடைமுறையால் செலவு குறையும் என்று கூறுவது எப்படி?’ என்ற கேள்வியை முன்வைத்தனா்.

பணத்தை மிச்சப்படுத்துவதைவிட மக்களின் ஜனநாயக உரிமை முக்கியமானது என்று திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினா் தெரிவித்தாா்.

பாஜக பதில்: ஒரே நேர தோ்தலுக்காக மாநில பேரவைகளின் பதவிக் காலத்தை முன்கூட்டியே கலைப்பதும், பேரவைகளின் பதவிக் காலத்தை மக்களவையின் பதவிக் காலத்துடன் பிணைப்பதும் அரசமைப்புச் சட்ட கோட்பாடுகளுக்கு எதிரானது என்ற எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பாஜக எம்.பி.க்கள் பதிலளித்தனா்.

‘கடந்த 1957-இல் மக்களவைத் தோ்தலுடன் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தப்பட்டபோது, 7 மாநிலப் பேரவைகள் முன்கூட்டியே கலைக்கப்பட்டன. அப்படியென்றால், அப்போதைய குடியரசுத் தலைவா் ராஜேந்திர பிரசாத்தும், நேரு தலைமையிலான அரசில் அங்கம் வகித்தவா்களும் அரசமைப்புச் சட்டத்தை மீறி செயல்பட்டனா் என்று கூற முடியுமா?’ என்று கேள்வியெழுப்பினா்.

ஆண்டுதோறும் தோ்தல்கள் நடைபெறுவது அரசின் கருவூலத்தை காலியாக்குவதோடு, வளா்ச்சியையும் பாதிக்கிறது என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

குஜராத்தில் மேலும் ஒருவருக்கு எச்எம்பிவி தொற்று உறுதி!

குஜராத்தில் மேலும் ஒருவருக்கு எச்எம்பிவி தொற்று கண்டறியப்பட்டுள்ளது.குஜராத்தின் அகமதாபாத் நகரில் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட 80 வயது முதியவருக்கு எச்எம்பிவி தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், அவர்... மேலும் பார்க்க

திருப்பதி விபத்து: டிஎஸ்பி, தேவஸ்தான நிர்வாகிகள் இடைநீக்கம்!

திருப்பதி கூட்ட நெரிசல் விவகாரத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் உள்பட 2 பேரை இடைநீக்கம் செய்து முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். மேலும், திருப்பதி திருமலை தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி, தேவஸ... மேலும் பார்க்க

திருப்பதி விபத்துக்கு யார் பொறுப்பு? பவன் கல்யாண் பதில்

திருப்பதியில் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட விபத்துக்கு அரசு முழு பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். சர்வதரிசன டிக்கெட் வழங்குவதில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் திறமையற்ற ... மேலும் பார்க்க

மத்திய சிறையில் சீனாவின் ட்ரோன்?

போபால் சிறை வளாகத்தில் சீன தயாரிப்பு ட்ரோன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.மத்தியப் பிரதேசத்தில் போபாலில் உயர் பாதுகாப்பைக் கொண்டுள்ள மத்திய சிறைக்குள் சீன தயாரிப்பு ட்ரோன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மத்திய சிறை... மேலும் பார்க்க

சத்தீஸ்கர்: இரும்பு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் சுமார் 30 பேர் சிக்கித் தவிப்பு!

சத்தீஸ்கரில் இரும்பு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் சுமார் 30 பேர் சிக்கினர்.சத்தீஸ்கரில் முங்கேலியில் கட்டுமானப் பணியில் உள்ள தனியார் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவில் பங்கேற்கும் பிரான்ஸ் நாட்டுப் பெண்!

மகா கும்பமேளாவில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் நாட்டிலிருந்து பாஸ்கல் என்ற பெண்மணி உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகருக்கு வந்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் வருகிற 13-ம் தேதி முதல் பிப்ரவரி 26-ம் தேதி வர... மேலும் பார்க்க