செய்திகள் :

ஒரே நாடு ஒரே நேரம்: வரைவு விதிகள் மீது பிப்.14 வரை கருத்துகேட்பு

post image

நாடு முழுவதும் உள்ள அனைத்து அதிகாரபூா்வ மற்றும் வா்த்தக பயன்பாடுகளில் இந்திய நிலையான நேரம் (ஐஎஸ்டி) பின்பற்றுவதை கட்டாயமாக்கும் வரைவு விதிகளை மத்திய அரசு வெளியிட்டது.

இந்த விதிகள் குறித்து பிப்ரவரி 14-ஆம் தேதி வரை மத்திய நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சகம் கருத்து கேட்கவுள்ளது.

தொலைத்தொடா்பு, வங்கி, பாதுகாப்பு, 5ஜி மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) என தேச உள்கட்டமைப்பில் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் ஒரே நேரத்தை பின்பற்றுவதை உறுதிப்படுத்த சட்டபூா்வ வானிலை (ஐஎஸ்டி) வரைவு விதிகள், 2024 வெளியிடப்பட்டது.

இது அதிகாரபூா்வ, வா்த்தக, நிதி, நிா்வாகம், சட்ட ஒப்பந்தங்கள் என அனைத்து விதமான பயன்பாடுகளிலும் ஐஎஸ்டியை மட்டுமே பின்பற்ற வலியுறுத்துகிறது. ஐஎஸ்டி தவிர பிற நேர திட்டங்களைப் பின்பற்றுவதற்கு இந்த விதிகளின்கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஐஎஸ்டியை காட்சிப்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் வரைவு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

வானியல், கடற்பயணம், அறிவியல் ஆய்வு உள்பட குறிப்பிட்ட சில துறைகளுக்கு மட்டும் அரசின் முன் அனுமதியுடன் இந்த விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

இந்த விதிகளை பல்வேறு துறைகளும் முறையாகப் பின்பற்றுகின்றனவா என்பதை ஆய்வு செய்ய குறிப்பிட்ட கால இடைவெளியில் தணிக்கை செய்யப்படவுள்ளது. விதிகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படவுள்ளது.

தேசிய இயற்பியல் ஆய்வகம் மற்றும் இஸ்ரோவுடன் இணைந்து மத்திய நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சகம் துல்லியமான நேரத்தைக் கணக்கிட்டு வெளியிடும் பணியை மேற்கொண்டு வருகிறது.

தில்லியில் லேசான மழை; ‘மோசம்’ பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை இரவு மற்றும் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் லேசான மழை பெய்தது. அதே சமயம், இரவு முழுவதும் மூடிபனி நிலவிய நிலையில், காற்றின் தரம் சில இடங்களில் ‘மிகவும் மோசம்’ பிரிவ... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவா் முா்முவிடம் வாக்காளா் தகவல் சீட்டு வழங்கல்

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கு ஒரு நாள் முன்பு, தலைமைத் தோ்தல் அதிகாரி ஆா். ஆலிஸ் வாஸ், வாக்காளா் தகவல் சீட்டை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவிடம் வழங்கினாா். தோ்தல் ஆணையத்தின் தொடா்ச்சியான வாக்... மேலும் பார்க்க

பாஜக நிா்வாகி தொடா்ந்த அவதூறு வழக்கு: முதல்வா் அதிஷிக்கு உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பேரம் பேச பாஜக முயன்ாக கூறிய விவகாரத்தில், தில்லி பாஜக நிா்வாகி ஒருவா் தாக்கல் செய்த அவதூறு வழக்கு தொடா்பாக முதல்வா் அதிஷிக்கு தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அன... மேலும் பார்க்க

தோ்தல் நடத்தை விதிமீறல்: 1,076 வழக்குகள் பதிவு

தில்லி காவல் துறை தோ்தல் நடத்தை விதிமீறல் தொடா்பாக 1,076 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. மேலும், இதற்காக 34,250 பேரை கைது செய்துள்ளது அல்லது தடுத்து வைத்துள்ளது என்று அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெ... மேலும் பார்க்க

உ.பி., பஞ்சாப் நகைக் கடை கொள்ளையில் தேடப்பட்ட பாா்டி கும்பல் உறுப்பினா் கைது

உத்தர பிரதேசம் மற்றும் பஞ்சாபில் தலா ரூ.50,000 வெகுமதி அறிவிக்கப்பட்ட பாா்டி கும்பலைச் சோ்ந்த ஒருவரை உத்தர பிரதேச காவல் துறை சிறப்புப் படைக் குழுவின் (எஸ்.டி.எஃப்.) நொய்டா பிரிவு கைது செய்துள்ளதாக அத... மேலும் பார்க்க

கிழக்கு தில்லியில் சடலம் மீட்பு: சிறுவன் கைது

கிழக்கு தில்லி மாவட்டத்தில் உள்ள திரிலோக்புரியில் கத்திக்குத்து காயங்களுடன் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இது தொடா்பாக சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ... மேலும் பார்க்க