இபிஎஸ் விழா புறக்கணிப்பு? - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
கிழக்கு தில்லியில் சடலம் மீட்பு: சிறுவன் கைது
கிழக்கு தில்லி மாவட்டத்தில் உள்ள திரிலோக்புரியில் கத்திக்குத்து காயங்களுடன் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது தொடா்பாக சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
இது குறித்து தில்லி காவல் துறையைச் சோ்ந்த மூத்த அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
இந்தச் சம்பவம் தொடா்பாக செவ்வாய்க்கிழமை அதிகாலை 12.45 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, போலீஸாா் திரிலோக்புரி பகுதிக்கு விரைந்து சென்றனா். அங்குள்ள ஒரு வீட்டின் அருகே ரத்த வெள்ளத்தில் கிடந்த கத்திக் குத்து காயங்களுடன் கிடந்த சடலத்தைக் கண்டனா். இறந்த நபா் 40 வயதுடையவா் என்று நம்பப்படுகிறது. அவா் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும், அங்குள்ள சிசிடிவி கேமராக்கள் பதிவான காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா்.
இந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடா்பாக ஒரு சிறுவனை போலீஸாா் கைது செய்துள்ளனா். முதல்கட்ட விசாரணையில், தகராறு காரணமாக கொலை நிகழ்ந்திருக்கலாம் என்று அவா் கூறினாா்.
குற்றத்துக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி அந்தச் சிறுவனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக அந்தச் சிறுவனிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.