செய்திகள் :

பெண்களை முந்திய ஆண் போட்டியாளர்... வேலூரில் கலக்கிய அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டி!

post image
சக்தி மசாலா, சத்யா ஏஜென்சீஸ், அஸ்வின் ஸ்வீட்ஸ், பச்சையப்பாஸ் சில்க்ஸ், கோல்டு வின்னர், எக்ஸோ, லலிதா ஜுவல்லரி, மில்கி மிஸ்ட், இந்தியன் ஆயில், சௌபாக்யா, ஜோஷ் ஆகியவை இணைந்து வழங்கிய `அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் - 2’ வேலூரில் நேற்று சிறப்பாக நடந்து முடிந்தது.

போட்டியின் விதிமுறைப்படி போட்டியாளர்கள் முதல் சுற்றுக்கு, தங்களது வீட்டில் இருந்தே உணவுகளை சமைத்துக் கொண்டு வந்து காட்சிப்படுத்தியிருந்தனர். மொத்தம் 68 போட்டியாளர்கள். கவுனி அரிசியில் மட்டன் கைமா, குதிரைவாலியில் சாக்லேட் பொங்கல் என அரங்கமே கமகமத்தது. ஒவ்வொரு ரெசிப்பியும் வாவ் சொல்ல வைத்தது.

வேலூர்

சுவை, ஆரோக்கியம், செய்முறை, காட்சிப்படுத்திய விதம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் பர்மிளா, பிரவீன், ஜெயலட்சுமி, ரோஜா, பவித்ரா, குமரன், தன்ஷீரா, ராஜலட்சுமி, ஸ்வேதா, மாலதி ஆகிய 10 பேரைத் தேர்ந்தெடுத்தார் போட்டியின் நடுவரான செஃப் தீனா. முதல் சுற்று முடிந்து காத்திருந்த போட்டியாளர்களை உற்சாகப்படுத்துவதற்காக ஜாலியான நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு ஸ்பான்சர்கள் மூலம் பரிசுகளும் வழங்கப்பட்டன.

இரண்டாவது சுற்றில் `லைவ் குக்கிங்’ செய்யப்பட்டது. பனீர் மசாலா, முட்டையுடன் சிக்கன் பிரியாணி, பனீர் 65, கோதுமை சம்பா சாம்பார், பனீர் தவா ஃபிரை, மாங்காய் பச்சடி, சாமை பனை வெல்லம், கொங்கு நாட்டு வெள்ளை குஷ்கா, வரகு அரிசி சிக்கன் பிரியாணி, பனீர் பரோட்டா, பனீர் வெஜ் குருமா என வகை வகையான ரெசிபிகளை செய்து அசத்தியிருந்தனர்.

கடும் போட்டி நிலவிய சூழலில், இறுதிப் போட்டிக்கு பவித்ரா, பர்மிளா, பிரவீன், மாலதி ஆகிய 4 பேரைத் தேர்வு செய்தார் செஃப் தீனா. இவர்களில் பிரவீன் என்கிற ஆண் போட்டியாளர் செய்த ரெசிபி ஒவ்வொன்றும் செஃப் தீனாவுக்கே சவால் விடும் விதமாக இருந்தது.

வேலூர்

இதையடுத்து, சக்தி மசாலா, சத்யா ஏஜென்சீஸ், அஸ்வின் ஸ்வீட்ஸ், பச்சையப்பாஸ் சில்க்ஸ், கோல்டு வின்னர், எக்ஸோ, லலிதா ஜுவல்லரி, மில்கி மிஸ்ட், இந்தியன் ஆயில், சௌபாக்யா, ஜோஷ் ஆகிய ஸ்பான்சர்கள் மூலம் அவர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. லைவ் குக்கிங்கில் கலந்துகொண்ட மற்ற 6 போட்டியாளர்களும் மேடை ஏற்றப்பட்டு அவர்களுக்கும் ஸ்பான்சர்கள் மூலம் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. 2-வது சுற்றில் தேர்வு செய்யப்பட்ட 4 பேரும் சென்னையில் நடக்கவிருக்கும் இறுதிப்போட்டியில் பங்கேற்பார்கள்.

வேலூர்: `கவுனி அரிசி மட்டன் கைமா, குதிரைவாலி சாக்லேட் பொங்கல்’ -கமகமத்த சமையல் சூப்பர் ஸ்டார் போட்டி

Qஅவள் விகடன் நடத்தும் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 2-க்கான போட்டிகள் பல்வேறு மாவட்டங்களில் 7 ஊர்களில் நடத்தப்பட்டுள்ளன.போட்டியின் நடுவராக, தொலைக்காட்சி மற்றும் யூடியூப் பிரபலம் செஃப் தீனா பொறுப்பேற்றுள... மேலும் பார்க்க

புதுச்சேரி: வெற்றிலை லட்டு… சோற்றுக் கற்றாழை பாயசம்… களைகட்டும் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் - 2

சக்தி மசாலா வழங்கும் அவள் விகடன், `சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் - 2’ ஆரம்பமாகி விட்டது. வாசகர்களின் கைப்பக்குவத்துக்குப் பாராட்டும், பரிசும் தரும் இந்த மாபெரும் சமையல் போட்டி, தமிழகம் முழுக்க 13 ஊர்களி... மேலும் பார்க்க

Healthy Foods: அஷ்டாம்ச கஞ்சி, கொள்ளு குழம்பு, நவதானிய அடை... மறந்துபோன பாரம்பர்ய மருத்துவ உணவுகள்!

அஷ்டாம்ச கஞ்சி அஷ்டாம்ச கஞ்சிதேவையானவை:கோதுமை, கழுவிக் காயவைத்த கேழ்வரகு, பொட்டுக் கடலை, பார்லி அரிசி, ஜவ்வரிசி, பாசிப்பயறு - முறையே அரை ஆழாக்கு, கசகசா - கால் ஆழாக்கு, ஓமம் - ஒரு டீஸ்பூன்.செய்முறை: எல... மேலும் பார்க்க

Chef Dhamu: 'எதிர்பார்க்காத ஒன்று...' - பத்மஶ்ரீ விருதுக்கு நன்றி சொல்லும் செஃப் தாமு

இந்தியாவின் மிக உயரிய விருதுகள் பத்ம விருதுகள். இந்த ஆண்டு இந்த விருதுகள் யார் யாருக்கு தரப்பட உள்ளன என்பது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மூலம் நமக்கு நன்கு அறிமுகமான ச... மேலும் பார்க்க

இறால் ரோஸ்ட், நெய்ச்சோறு, சிக்கன் கேக்... காரைக்குடியை கமகமக்க வைத்த அவள் சமையல் சூப்பர் ஸ்டார்..!

அவள் விகடன் நடத்தும் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் -2 விழா காரைக்குடியில் கமகமக்க உற்சாகமாகத் தொடங்கியது.அவள் விகடன் நடத்தும் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் -2வீரம் நிறைந்த வரலாறுக்கும், தமிழ் மொழி உணர்வுக... மேலும் பார்க்க