உலகளாவிய மேம்பாடுகள் குறித்து பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சருடன் ஆலோசனை!
வேலூர்: `கவுனி அரிசி மட்டன் கைமா, குதிரைவாலி சாக்லேட் பொங்கல்’ -கமகமத்த சமையல் சூப்பர் ஸ்டார் போட்டி
Qஅவள் விகடன் நடத்தும் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 2-க்கான போட்டிகள் பல்வேறு மாவட்டங்களில் 7 ஊர்களில் நடத்தப்பட்டுள்ளன.
போட்டியின் நடுவராக, தொலைக்காட்சி மற்றும் யூடியூப் பிரபலம் செஃப் தீனா பொறுப்பேற்றுள்ளார். நேற்று புதுச்சேரியை தொடர்ந்து 8-வது ஊராக வேலூரில் இன்று (பிப்ரவரி 09) அவள் விகடன் `சமையல் சூப்பர் ஸ்டார்’ நிகழ்ச்சி சிறப்பாக தொடங்கியது. செஃப் தீனா, லலிதா ஜுவல்லரி ஷோரூம் மேலாளர் முகமது ஃபாசில், பச்சையப்பாஸ் சில்க்ஸ் வேலூர் கிளை மேலாளர் யோகேஸ்வரன், மில்கி மிஸ்ட் உதவி மேலாளர் அருண் ஆகியோர் குத்து விளக்கேற்றி மங்களகரமாக போட்டியைத் தொடங்கி வைத்தனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-09/b8wqoloy/WhatsApp_Image_2025_02_09_at_2_12_48_PM.jpeg)
போட்டியின் விதிமுறைப்படி போட்டியாளர்கள் முதல் சுற்றுக்கு, தங்களது வீட்டில் இருந்தே உணவுகளை சமைத்து வந்து காட்சிப்படுத்த வேண்டும். சுவை, ஆரோக்கியம், செய்முறை, காட்சிப்படுத்திய விதம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் 10 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, இரண்டாம் சுற்றுக்குச் செல்வார்கள். அதில் நடுவர் கூறும் விதிமுறைகளையும், கொடுக்கப்பட்ட பொருள்களையும் பயன்படுத்தி போட்டி அரங்கில் சமைக்க வேண்டும். அதில் தேர்வு செய்யப்படுபவர்கள், சென்னையில் நடக்கவிருக்கும் இறுதிப்போட்டியில் பங்கேற்பர்.
முதல் சுற்றில், பரவலாக சமைக்கப்படும் பாரம்பர்ய, சத்தான, விருப்பமான, ஆரோக்கியம் தரக்கூடிய உணவு வகைகளை விதிமுறைப்படி வீட்டிலிருந்தே வகை வகையாக சமைத்துக் கொண்டு வந்து பெண்கள் பலரும் கவரும் விதமாக காட்சிப்படுத்தியிருந்தனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-09/y5tcwydi/WhatsApp_Image_2025_02_09_at_2_14_06_PM.jpeg)
அரங்கம் கமகமக்க... நாவூறும் சுவையிலான அரிசி நொய் உப்புமா, தயிர் சட்னி, பழைய அமுது, திருக்கை மீன் குழம்பு, சுறா புட்டு, முளைப் பயறு சோளம் சுண்டல், ஆடு தொடா இலை டீ, மோர்க்களி, காலி ஃபிளவர் பாயா, மிளகு மஞ்சள் பால், பாசிப் பருப்பு லட்டு, முசுமுசுக்கை இலை அடை, மிளகு அடை, விறால் மீன் குழம்பு, ராகி சந்தைக் களி, திணையில் செய்த கட்லட், குதிரைவாலி சாக்லேட் பொங்கல், மட்டன் நல்லி, மட்டன் குழம்பு, காடை ஃபிரை, வெத்தலை பாயசம், அடை அவியல், கோதுமை மாவு கொழுக்கட்டை, பச்சரிசி மற்றும் துவரம் பருப்பில் செய்யக்கூடிய பெளா பாத், கருப்பு உளுந்து லட்டு, தூய மல்லி சாம்பார் சாதம், கொள்ளு குழம்பு, நாட்டுக் கோழி குழம்பு, கருப்பு கவுனி அரிசியில் மட்டன் கைமா கஞ்சி, சங்கரா மீன் குழம்பு, கொள்ளு துவையல், சம்பா ரவை பொங்கல், பனீர் பிரியாணி, மட்டன் கைமா, தேங்காய் போலி, டிராமிசு சிக்கன், கொங்கு பிரியாணி, தேங்காய் பால் சாதம், ஃபிஷ் கோலா உருண்டை, ஃபிஷ் கறி மசாலா, ஆவாரம்பூ நெய்பருப்பு, வாழைப்பூ கோலா உருண்டை, சங்கு பூ சாதம், தேங்காய் பால் ரசம், வெஜ் ஈரல் குழம்பு, வாழைத் தண்டு உருளைக்கிழங்கு பச்சடி, கறிவேப்பிலை சூப், ஜப்பான் வெஜிடபிள் பம்கின், இறால் ஊறுகாய், ஹனி கேக் ஆகியவை முக்கிய இடம் பிடித்தன.
கொசப்பேட்டையைச் சேர்ந்த யுத்திகாஸ்ரீ என்ற 7 வயது சிறுமியும், ஊசூரைச் சேர்ந்த 12 வயது சிறுவன் முகமது ரியானும் போட்டியில் கலந்துகொண்டு தங்களின் ரெசிப்பியைக் காட்சிப்படுத்திய முறை வாவ் சொல்ல வைத்தது. இதையடுத்து, செஃப் தீனா உணவை ருசிபார்த்து மதிப்பெண் வழங்கினார். கடுமையான போட்டி நிலவிய முதல் சுற்றில் இருந்து 10 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, இரண்டாவது சுற்று `லைவ் குக்கிங்’ போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தேர்வு செய்யப்படுபவர்கள், சென்னையில் நடக்கவிருக்கும் இறுதிப்போட்டியில் பங்கேற்பர்.