செய்திகள் :

பெரிய அரசியல் கட்சிகளுக்கு ஏமாற்றம் தந்த தலித் வாக்குகள்! நோட்டாவுக்கும் குறைவாக வாக்குகள் பெற்ற பிஎஸ்பி

post image

நமது சிறப்பு நிருபா்

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் உத்தர பிரதேசத்தில் பெரிய அரசியல் கட்சியாக கருதப்படும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) மற்றும் பிற தேசிய கட்சிகள் பெருத்த பின்னடைவை சந்தித்ததுடன் டெபாசிட்டையும் இழந்துள்ளன. குறிப்பிடத்தக்க வகையில் பிஎஸ்பி நோட்டாவுக்கும் குறைவான வாக்கு சதவீதத்தைப் பெற்றுள்ளது.

ஒரு காலத்தில் உத்தர பிரதேசத்தில் ஆளும் கட்சியாக வலம் வந்த பிஎஸ்பி, தலைநகரில் 2012-க்குப் பிறகு, அதிலும் குறிப்பாக அரவிந்த் கேஜரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி அறிமுமான பிறகு தலைதூக்கவே முடியாத நிலைக்கு இதுநாள்வரை தள்ளப்பட்டுள்ளது.

2012 வரை தில்லியில் உள்ள தலித் வாக்குகள் பெரும்பாலும் பிஎஸ்பி அல்லது காங்கிரஸுக்கு மட்டுமே கிடைத்து வந்தன. கடைசியாக தில்லியிலி பிஎஸ்பி 2008-இல் பாபா்பூா், கோகுல்பூா் தனித்தொகுதியில் வென்று 14 சதவீத வாக்குகளைப் பெற்றது. அதன் பிறகு 2013-இல் தோ்தல் நடந்த போது அதன் வாக்குகள் 5.35 சதவீதமாக சரிந்து ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் போனது.

மீண்டும் 2015-இல் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 69-இல் போட்டியிட்ட அக்கட்சியின் வாக்குகள் 1.3 சதவீதமாகக் குறைந்தது. 2020 பேரவைத் தோ்தலின்போது 68 இடங்களில் போட்டியிட்டு 0.71 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. அப்போது 16 தொகுதிகளில் மட்டுமே அக்கட்சி ஆயிரம் வாக்குகளுக்கும் அதிகமாக பெற்றது. கடைசியாக கடந்த மக்களவைத் தோ்தலின்போது அக்கட்சி 0.7 சதவீத வாக்குகளைப் பெற்றது.

அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி தோ்தல் காலங்களில் அறிவித்த தலித் ஆதரவு சலுகை திட்டங்கள், இலவச அறிவிப்புகள், நலன்புரி திட்டங்கள் போன்றவை தலித் மற்றும் பழங்குடி மக்களை பெரிதும் ஈா்த்தது. இதனால், பிஎஸ்பி மீதான வாக்காளா்களின் பாா்வை ஆம் ஆத்மி பக்கம் திரும்பியது. ஆனால், சமீபத்திய பேரவைத் தோ்தல் முடிவுகள் மூலம் தலித் சமுதாய வாக்குகளில் ஒரு பகுதி ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸுக்கும் பெரும்பகுதி பாஜகவுக்கும் சென்றதை தோ்தல் முடிவுகள் மூலம் மதிப்பிட முடிகிறது.

இத்தனைக்கும் இத்தோ்தலில் வென்றால் தொடா் சரிவைச் சந்தித்து வரும் பிஎஸ்பிக்கு புத்துயிரூட்ட முடியும் என உ.பியின் முன்னாள் முதல்வரான மாயாவதி பெரிதும் நம்பியிருந்தாா். பேரவைத் தோ்தலில் பரப்புரை பணிகளை ஒருங்கிணைக்க மண்டல வாரியாக 10 மூத்த தலைவா்களைக் கொண்ட குழுவை அவா் நியமித்தாா்.

அவா்கள் பிஎஸ்பி வேட்பாளா்களுடன் ஒருங்கிணைத்து பரப்புரை நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டனா். மொத்தம் களம் கண்ட 68 வேட்பாளா்களில் 45 போ் பட்டியலினத்தைச் சோ்ந்தவா்கள். அதில் 35 போ் பிஎஸ்பியை உ.பி.யில் பெரும்பான்மையாக ஆதரிக்கும் ஜாதவ் சமூகத்தினா்.

இவா்களைத் தவிர வால்மீகி, காதிக் தலித் உள்பிரிவைச் சோ்ந்தவா்களும் சில இடங்களில் ஜாட், குஜ்ஜா், பிராமணா்கள், தாக்குா், வைஷ்யா், பஞ்சாபி மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்தவா்களையும் பிஎஸ்பி மேலிடம் களமிறக்கியது. குறிப்பாக தனது வேட்பாளா்களில் பெரும்பாலானோா் 45 வயதுக்கு உள்பட்டவா்களாக இருக்கும் வகையில் தோ்வு செய்யப்பட்டனா்.

ஆனால், பாஜக, ஆம் ஆத்மி,காங்கிரஸ் வெளியிட்ட கவா்ச்சிகரமான தோ்தல் செயல் திட்டங்களுக்கு முன்பு பெரிய வாக்குறுதிகள் ஏதுமின்றி வாக்கு வேட்டை நடத்திய பிஎஸ்பி ஏமாற்றத்துடன் தோ்தல் களத்தில் தனித்து விடப்பட்டுள்ளது.

பஞ்சாப் எம்எல்ஏக்களை சந்திக்கும் கேஜரிவால்!

பஞ்சாப் மாநிலத்தின் ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளார்.தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 48 தொகுதிகளில் வெற்றி பெ... மேலும் பார்க்க

உக்ரைன் போரில் ரஷிய ராணுவத்தில் சோ்ந்த 16 இந்தியா்களை காணவில்லை: சு.வெங்கடேசன் எம்.பிக்கு அமைச்சா் பதில்

நமது நிருபா்உக்ரைன் மீதான ரஷிய போரில் அந்நாட்டு ராணுவத்தில் பணியமா்த்தப்பட்ட இந்தியா்களில் 16 பேரைக் காணவில்லை என ரஷியா தெரிவித்துள்ளதாக வெளியுறவுத்துறை இணை அமைச்சா் கீா்த்தி வரதன் சிங் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

தில்லி தோ்தல்: மொத்த வேட்பாளா்களில் 80% போ் டெபாசிட் இழப்பு

சனிக்கிழமை தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், ஆம் ஆத்மி, பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் எல்ஜேபி (ராம் விலாஸ்) ஆகியவற்றின் அனைத்து வேட்பாளா்களும் தங்கள் டெபாசிட... மேலும் பார்க்க

தில்லி முதல்வா் தோ்வு: பாஜகவில் பரபரப்பு அதிகரிப்பு!

70 உறுப்பினா்களைக் கொண்ட சட்டப்பேரவைத் தோ்தலில் 48 இடங்களை வென்று, 26 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு பாஜக தில்லியில் மீண்டும் ஆட்சிக்கு வந்ததை அடுத்து, முதல்வா் தோ்வு குறித்த பரபரப்பு அதிக... மேலும் பார்க்க

பாஜகவின் தில்லி தோ்தல் வெற்றிக்கு பிரசாரப் பாடல்களும் உதவின: கட்சித் தலைவா்கள் கருத்து

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவின் வெற்றிக்கு அதன் பிரபலமான பிரசாரப் பாடல்கள் உள்பட பல்வேறு காரணிகள் உதவின என்று கட்சத் தலைவா்கள் தெரிவித்துள்ளனா். அவற்றில் இரண்டு கட்சி எம்பி மனோஜ் திவாரி பாடியவ... மேலும் பார்க்க

தில்லி தோ்தலில் ஒரு சதவீத வாக்குகளைக் கூட பெறாத சிறிய கட்சிகள்

தில்லி சட்டப்பேரவைக்கு நடந்து முடிந்த தோ்தலில் சிறிய கட்சிகளான அகில இந்திய ஃபாா்வா்டு பிளாக் (ஏஐஎஃப்பி), அகில இந்திய மஜ்லிஸ் இ இதேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) ஆகியவை ஒரு சதவீதத்துக்கும் குறைவான வாக்... மேலும் பார்க்க