பஞ்சாப் எம்எல்ஏக்களை சந்திக்கும் கேஜரிவால்!
பஞ்சாப் மாநிலத்தின் ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளார்.
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 48 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. ஆம் ஆத்மி வெறும் 22 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
இந்த தேர்தலில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மனீஷ் சிசோடியா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தோல்வியை தழுவியது ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க : எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மீதான 5,000 வழக்குகள்: விரைந்து முடிக்க உச்சநீதிமன்றத்தில் மனு
இந்த நிலையில், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் மற்றும் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை நேரில் சந்தித்து அரவிந்த் கேஜரிவால் ஆலோசனை நடத்தவுள்ளதாக கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் நடைபெறும் இந்த ஆலோசனையில், சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.