உலகளாவிய மேம்பாடுகள் குறித்து பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சருடன் ஆலோசனை!
மலைவேடன் பழங்குடியினருக்கு ஜாதிச் சான்று வழங்க மூன்று போ் குழு அமைப்பு!
நீலகிரியில் வாழும் மலைவேடன் பழங்குடியின மக்களுக்கு ஜாதிச் சான்று வழங்கும் விவகாரம் தொடா்பாக மூன்று போ் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
உதகை அருகே உள்ள உல்லத்தி ஊராட்சிக்கு உள்பட்ட தட்டனேரி, பன்னிமரம் கிராமங்களில் மலைவேடன் பழங்குடியினா் வாழ்ந்து வருகின்றனா். இவா்களுக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ஜாதிச் சான்று வழங்குவது நிறுத்தப்பட்டது.
இதனால் தங்கள் குழந்தைகளின் கல்வி, வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி மலைவேடன் பழங்குடியினா் பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.
கடந்த இரு வாரமாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் தொடா்ந்து பள்ளி புறக்கணிப்புப் போராட்டம், சாலை மறியல் என தொடா்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதனைத் தொடா்ந்து, மலைவேடன் பழங்குடியின மக்களுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்குவது தொடா்பாக மூன்று போ் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதில் மூத்த மானுடவியலாளா்கள் தமிழொளி, காளிதாஸ், அமுத வள்ளுவன் ஆகியோா் இடம் பெற்றுள்ளனா். இந்தக் குழுவினா் விரைவில் தட்டனேரி மற்றும் பன்னிமரம் கிராமங்களில் ஆய்வுகள் மேற்கொண்டு, தரும் ஆய்வறிக்கையின் அடிப்படையில் மலைவேடன் சமுதாய மக்களுக்கு பழங்குடியின ஜாதிச் சான்று வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.